Vadivelu: சினிமாவில் ஒரு நோக்கத்தோடு காலடி வைப்பவர்களை சினிமா தான் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கிறது. அப்படி சினிமாவில் வந்த வேலையை மறந்து விட்டு கிடைத்த வேலையை செய்தாலும், அதை பக்காவாக செய்யும் ஐந்து நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்.
வடிவேலு: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நகைச்சுவை உலகின் முடிசூடா மன்னனாக இருந்தவர் வடிவேலு. அவ்வப்போது சில படங்களில் நிமிடங்களுக்கு சீரியஸான காட்சிகளில் நடிப்பது உண்டு. ஆனால் மாமன்னன் படத்தில் முழுக்க குணச்சித்திர கேரக்டரின் நடித்து தற்போது அந்த கேரக்டருக்கே பிரமோஷன் ஆகிவிட்டார். இவருடைய நடிப்பில் அடுத்து மாரிசன் படம் வர இருக்கிறது.
எஸ் ஜே சூர்யா: விஜய் மற்றும் அஜித்தை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக களம் கண்டார். இதை தொடர்ந்து தற்போது நவீன உலகின் நடிகவேள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டும் அளவுக்கு நடிப்பில் மிளிர்கிறார். எஸ் ஜே சூர்யா நடிச்சாலே அந்த படம் ஹிட்டு தான் என்ற புதிய விதியையும் படைத்திருக்கிறார்.
கௌதம் மேனன்: மின்னலே, வாரணம் ஆயிரம், நீதானே என் பொன் வசந்தம் என காதல் கதைகளாக இருக்கட்டும், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க போன்ற அதிரடி படங்களாக இருக்கட்டும் கௌதம் மேனன் எப்போதுமே தனி ரகம் தான். இப்போது வில்லன், காமெடியன் என நடிப்பில் கலக்க ஆரம்பித்திருக்கிறார்.
வரலட்சுமி சரத்குமார்: வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் என்னவோ ஹீரோயின் ஆக தான் களம் இறங்கினார். ஆனால் வில்லத்தனமான நடிப்புதான் அவருக்கு கை கொடுத்தது. இப்போது தென்னிந்திய சினிமாவின் ஆஸ்தான வில்லி நடிகை ஆகிவிட்டார்.
மணிகண்டன்: திரைக்கதை எழுதுவது, உதவி இயக்குனர், துணை நடிகர்கள் என சினிமாவில் எப்படி எல்லாம் முயற்சி செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் முயற்சி செய்து விட்டார் மணிகண்டன். இவருக்கு இயக்குனர் ஆவது தான் ஆசையாம்.
ஜெய் பீம் படம் ரிலீசுக்கு முன்பு மணிகண்டன் படம் இயக்க புஷ்கர் காயத்ரி அந்த படத்தை தயாரிப்பது என்று முடிவாகி இருக்கிறது. ஜெய் பீம் படம் சூப்பர் ஹிட் அடித்ததால் அவர்களே மணிகண்டனை நீ நடிகனாக உன்னுடைய சினிமா பயணத்தை தொடரு என்று சொல்லி இருக்கிறார்கள்.