Actor Saravanan : ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த சரவணன் அதன் பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் கார்த்தியின் அறிமுக படமான பருத்திவீரன் படத்தில் செவ்வாழையாக நடித்திருந்தார். அதில் கார்த்தி சித்தப்பு என்று கூப்பிடும் அழகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரவணன் கலந்து கொண்டார். ஆனாலும் பெரிய அளவில் அவரால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனது. இப்போது வெப் சீரிஸில் இறங்கி இருக்கிறார். அவ்வாறு அவருடைய நடிப்பில் சட்டமும் நீதியும் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது.
இந்தத் தொடரின் அனைத்து எபிசோடுகளுமே 2 மணி நேரம்தான் கொண்டது. அதாவது கோர்ட்டின் வாசலில் ஒரு முதியவர் தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலைக்கான காரணம் என்ன, அவருக்கு நீதி கிடைத்ததா என்பதுதான் சட்டமும் நீதியும் தொடரின் கதை.
சரவணனுக்கு கம்பேக் கொடுத்த வெப் தொடர்
எந்த வழக்கும் கையில் எடுக்காமல் இருக்கும் சரவணன் இந்த முதியவரின் தற்கொலை வழக்கை கையில் எடுக்கிறார். கடைசியில் இறந்தவருக்கு சரியான நீதி கிடைத்ததா என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இந்த கதை கொடுத்து இருக்கிறது. இதில் சரவணனின் கதாபாத்திரம் மிகுந்த பாராட்டக்கூடிய ஒன்றாக உள்ளது.
மேலும் ஜீ 5 ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகி 72 மணி நேரத்தில் 51 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. கண்டிப்பா எல்லோரும் பார்க்கும்படியான ஒரு வெப் சீரிஸாக சட்டமும் நீதியும் இருக்கிறது.
சரவணனுக்கு சினிமா கைவிட்டாலும் டிஜிட்டல் ஒரு நல்ல தளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.