Fahadh Fazil : மலையாள நடிகரான பகத் பாசில் தன்னுடைய திறமையால் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் படம் தான் மாரீசன். இந்த படத்தில் திருடனாக பகத் பாசில் நடித்திருக்கிறார்.
பைக்கில் வரும் பகத் பாசிலிடம் லிப்ட் கேட்டு ஏறுகிறார் வடிவேலு. இதன் இடையே இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை கொண்டிருக்கும் படம் தான் மாரீசன். இந்த படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவன் தலைவி படம் வெளியாக இருக்கிறது.
தலைவன் தலைவி படத்திற்கு பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, நித்யா மேனன், இயக்குனர் பாண்டிராஜ் என எல்லோரும் தனித்தனியாக யூடியூப் சேனலில் ப்ரமோஷன் செய்து வருகிறார்கள்.
அஜித் பாணியை பின்பற்றும் பகத் பாசில்
இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆனால் மாரீசன் படம் பொருத்தவரையில் எந்த பிரமோஷன் செய்யவில்லை. படத்திற்கான ஆடியோ லான்ச், ட்ரைலர் வெளியீட்டு விழா என எதுவுமே நடத்தவில்லை.
அதோடு வடிவேலுவும் ப்ரோமோஷனில் இறங்கவில்லை. அதே போல் பகத் பாசில் பெரிய படங்களுக்கே ப்ரமோஷனில் கலந்து கொள்ள மாட்டார். அவர் அஜித்தின் பாணியை தான் பின்பற்றி வருகிறார். இதனால் மாரீசன் படத்திற்கு ப்ரமோஷன் இல்லாமல் போய்விட்டது.
சமீபகாலமாக படங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் பிரமோஷன் கட்டாயம் என்பதை படக்குழு உணர்ந்திருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் மாரீசன் படம் எப்படி மக்களை சென்றடையும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.