Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், நித்தீஷ் வேண்டாம் என்று விவாகரத்து செய்வதற்கு இனியா முடிவு செய்துவிட்டார். ஆனால் விவாகரத்து கொடுக்காமல் கஷ்டப்படுத்த வேண்டும் என்று முடிவு பண்ணிய சுதாகர் குடும்பத்தில் இருப்பவர்கள் இனியா கேரக்டரை தவறாக சொல்லி விவாகரத்துக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இனியா, சுதாகர் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்கும் முறையில் தவறுகளை தட்டி கேட்கிறார். ஆனால் இனிய பேசியது மனநிலை சரியில்லாதது போல் இருக்கிறது என்று அப்படியே இனியா பற்றி தவறாக சொல்லி அதை கோபியிடம் சொல்லிவிடுகிறார். இதனால் பயந்து போன கோபி, சுதாகர் வீட்டிற்கு வந்து வாசலில் நின்றுக் கொண்டிருந்த இனியாவை கூப்பிட்டு சமாதானமாக பேசுகிறார்.
பிறகு இனியாவே ஆபீஸில் விட்டுவிட்டு பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு போய் நடந்த விஷயத்தை சொல்லுகிறார். அப்பொழுது அங்கே ஆகாஷ் இருந்த பொழுது கோபி வந்ததும் ஹோட்டலை விட்டு வெளியே போகிறார். அப்படி போகும் பொழுது ஆகாஷிடம் எப்படி இருக்கிறாய், நல்லா படிக்கணும் என்று கோபி பேச ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் கோபிக்கு நாம் தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட ஆரம்பித்துவிட்டது.
அடுத்ததாக பாக்யாவிடம் பேசி இனியாவின் மனநிலையை மாற்றுவதற்கு குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து ஒரு வாரத்திற்கு வெளியே போயிட்டு வரலாம் என்று சொல்கிறார். உடனே பாக்கியாவும் இனியாவிற்காக சரி என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக ஆபீஸில் இருக்கும் இனியா, சுதாகர் செய்த துரோகத்தை பற்றி ஃபீல் பண்ணுகிறார்.
உடனே இப்படியே இந்த விஷயத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக டிவி மூலம் பேட்டி கொடுக்கும் விதமாக சுதாகர் குடும்பத்தையும் நித்திஷ் செய்த அநியாயத்தையும் போட்டு உடைக்கும் விதமாக எல்லாத்தையும் சொல்லி விடுகிறார். இந்த பேட்டியை கேட்ட சுதாகர் குடும்பத்தில் இருப்பவர்கள் கோபமாக இருக்கிறார்கள். இதனால் நிதிஷ், இனியாவை தனியாக பார்த்து பேச வேண்டும் என்று வர சொல்லி பிரச்சனை பண்ண போகிறார்.