Vijay : அவர்கள் நடிகர் விஜய் அவர்கள் தற்போது இருக்கும் சினிமாவில் பேரும் புகழோடும் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர். இந்த பேர், புகழ், பணம் அனைத்தையும் முதலில் தள்ளிவிட்டு மக்களுக்காக களத்தில் இறங்கி செயல்பட அரசியலில் இறங்கி விட்டார்.
இவர் எதைத் தொட்டாலுமே அதில் முழுமூச்சுடன் இறங்கி செயல்படுவது இவர் அதை விருப்பமா. அந்த காரியத்தில் இவருக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறங்கி விட்டால் அதில் முழுமூச்சோடு செயல்பட்டு வெற்றியை பெறுவதில் பேரார்வம் கொண்டவராம் நடிகர் விஜய்.
அன்று workout ஆனது, இன்று workout ஆகுமா..
அதாவது சினிமாவில் நடிக்கும் போது முதலில் இவருக்கு நடிப்பு மீது பெரிதும் ஆர்வம் இல்லையாம். நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகர் உனக்கு நடிப்பு செட் ஆகும் என்று கூறி சினிமாவில் நடிக்க வைத்துள்ளார்.
பிறகு பல கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி, விருப்பம் இல்லாமல் நுழைந்த சினிமாவில் இன்று தனக்கென ஒரு அங்கீகாரமும, தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.
அதேபோல தற்போது அரசியலில் விஜய் இருப்பது விஜய் எடுத்த முடிவல்ல, விஜய் அவர்களது அப்பா தான் விஜய்க்கு முன்னரே விஜய் அரசியலுக்கு போவதாக அறிவிப்பு விடுத்தார். அதனால் சினிமாவில் விஜய் அவர்களின் அப்பா எடுத்த முடிவு தான் விஜய்யை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
தற்போது அரசியலிலும் விஜய் அவர்களின் அப்பா தான் அரசியல் விஜய்க்கு ஒத்துவரும் என்ற முடிவை எடுத்து விஜய் அவர்களை அரசியலில் இறங்க வைத்துள்ளார். இதனால் சினிமாவில் உச்சத்தை அடைந்தது போல அரசியலிலும் வெற்றி வாகை சூடுவார் என்ற நம்பிக்கை விஜய் அவர்களின் அப்பாவிற்கு நிச்சயமாக இருக்கிறது. இந்த நம்பிக்கையை நிறைவேற்றுவாரா நடிகர் விஜய்.