Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக கோகிலாவின் திருமணம் தாலி கட்டும் தருணத்திற்கு வந்துவிட்டது. இந்த நேரத்தில் தான் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் பூதாகரமாக வெடிக்க இருக்கிறது.
கோகிலா கழுத்தில் தாலி ஏறியவுடன் ஆனந்தியை கல்யாணம் செய்து கொள்வது என அன்பு முடிவெடுத்து இருக்கிறான். இப்படிப்பட்ட நேரத்தில் மண்டபத்தில் உறவினர் ஒருவர் ஆனந்தியை தங்களுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க கேட்கிறார்.
எதிர்பாரா டிவிஸ்ட்
இந்த திருமண பேச்சு போய்க் கொண்டிருக்கும் போதே முத்து அன்புவை அழைத்து இது பற்றி பேசுகிறான். உடனே அன்பு முத்துவிடம் ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தன்னுடைய திட்டத்தை பற்றி சொல்கிறான்.
அதே நேரத்தில் கோயில் பூசாரி சுயம்புலிங்கத்தை சந்திக்கிறார். நீ ஒரு கர்ப்பமான பெண்ணை திருமணம் செய்து கொள்ள இப்படி ஆசைப்படுகிறாயே. ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாள் என்று சொல்கிறார். சுயம்புலிங்கம் இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியாவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
எப்படியும் கோகிலா திருமணத்தை நிறுத்துவதற்காக சுயம்புலிங்கம் மண்டபத்திற்கு வந்து ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை பற்றி போட்டு உடைக்க போகிறான். இதற்குப் பிறகு அன்பு ஆனந்தியை திருமணம் செய்து கொள்கிறானா, இந்த பிரச்சனையை இருவரும் எப்படி எதிர் கொள்கிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.