Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரதி தீபன் பிரச்சனையால் விஜயா பயத்தில் நிற்கிறார். இந்தியாவின் நிலைமையை புரிந்து இன்னும் வெறுப்பேற்றும் விதமாக சிந்தாமணி மற்றும் ஸ்ருதியின் அம்மா வந்து பயமுறுத்தி விட்டார்கள். ஆனாலும் பிள்ளைகள் நமக்கு சப்போர்ட் பண்ணுவதால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று விஜயா கொஞ்சம் தைரியத்துடன் இருக்கிறார்.
அடுத்ததாக ஷோரூமுக்கு போன மனோஜ் கோவமாக எல்லோரிடமும் பேசுகிறார். இதனால் அங்கு வேலை பார்க்கும் ராணி, ரோகினிடம் என்னாச்சு ஏதாவது பிரச்சனையா? சார் வந்ததும் இருந்து ரொம்ப கோபமாக இருக்கிறார் என்று கேட்கிறார். அதற்கு வீட்டில் நடந்த பிரச்சனையும் விஜயா மாட்டிக்கொண்ட விஷயத்தையும் சொல்கிறார். உடனே ராணி ஐடியா கொடுக்கிறார்.
அந்த ஐடியாவை மனோஜிடம் சொல்லும் விதமாக இந்த அம்மா இருக்குன்னு பிரச்சனையை நாம் சரி செய்து வைத்தால் என் மீது இருக்கும் குறைந்துவிடும். அதனால் அந்த ரதி வீட்டுக்கு சென்று நாம் லாம் கொஞ்சம் பணம் கொடுத்து வரலாம். அவர்கள் உடனே சமாதானம் ஆகி விடுவார்கள் அத்தைக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது என் மீதும் கோபம் போய்விடும் என்று ரோகினி சொல்கிறார்.
உடனே மனோஜ் ரோகினி இரண்டு பேரும் ரதி வீட்டுக்கு போனதும் அங்கே சொந்தக்காரர்கள் அனைவரும் இருக்கிறார்கள். உங்களிடம் டீல் பேசும் விதமாக மனோஜ் இரண்டு விஷயம் சொன்னார். அதாவது அந்த பையனிடம் ஏமாந்து போய் நிற்கும் உங்க பெண் கர்ப்பமாக இருப்பதால் அதை கலைத்து விடுங்கள். நஷ்ட ஈடாக நாங்கள் ஒரு லட்ச ரூபாய் கொடுக்கிறோம். அதை வைத்து இன்னொரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைத்து விடுங்கள் என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் பெண் குடும்பத்தில் இருப்பவர்கள் மனோஜை கட்டி போட்டு ரோகிணியும் ரூமுக்குள் வைத்து அடைத்து விடுகிறார்கள். அடுத்ததாக மீனா, இந்த பிரச்சினையை முடிப்பதற்காக பார்வதி அந்த இடம் தீபன் நம்பரை வாங்கிட்டு வந்து முத்துவிடம் கொடுக்கிறார். அதன்படி மீனா முத்துவும் ஒரு சின்ன டிராமா போடுகிறார்கள். அந்த வகையில் மீனா ரதியின் தோழியாக பேசி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்று பொய் சொல்கிறார்.
அதைக் கேட்டதும் தீபன் மீனா அனுப்பிய லொகேஷனுக்கு வந்து விடுகிறார். பிறகு முத்து அந்த பையனை அடித்த நிலையில் அவன் நான் ரதியே மனசார காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று சத்தியம் செய்கிறார். பிறகு இந்த பையனை வைத்து அவங்க குடும்பத்துக்கு போன் பண்ணி ரவி வீட்டுக்கு வர சொல்கிறார். உடனே மீனா முத்து தீபன் அனைவரும் சேர்ந்து ரதி வீட்டுக்கு போன நிலையில் தீபன் குடும்பமும் அங்கு வந்து விடுகிறார்கள்.
வந்ததும் முத்து இரண்டு குடும்பத்தையும் பேசி சமாதானமாக போக சொல்கிறார். அதன்படி அவர்கள் பேசி இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவுக்கு வந்து விடுகிறார்கள். கடைசியில் இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்த முத்து மீனாவிற்கு அவர்கள் நன்றி சொல்கிறார்கள். அத்துடன் முத்துவிடம் சொன்ன ஐடியாவையும் சொல்லி ரூம்கள் கட்டி போட்டிருப்பதையும் காட்டுகிறார்கள். இதனால் இவர்கள் முன் மனோஜ் மற்றும் ரோகினி அவமானப்பட்டு நிற்கிறார்கள்.