Vijay : விஜய் அவர்கள் முதன் முதலில் சினிமாவில் நடித்ததற்கு விஜய்யின் அப்பா சந்திரசேகரை காரணம். ஏனெனில் விஜய் அவர்களுக்கு துளி அளவும் சினிமாவில் ஆர்வம் இல்லை. அவரை கட்டாயப்படுத்தி இது உனக்கு செட் ஆகும் என்று நடிக்க வைத்தது விஜய்யின் அப்பாதான்.
விஜய் மற்றும் அவரது அப்பாவின் மாஸ்டர் பிளான்..
இவ்வாறு இருக்கையில் இவர் இயக்கத்திலேயே ஒரு படத்தை எடுத்து அதில் தன் மகனை நடிக்க வைத்து எல்லா நடிகர்களையும் டம்மியாக்கி விஜய் அவர்களை பிரபலமாகியவர் விஜயின் அப்பா சந்திரசேகர் தான்.
இதுபோலவே விஜய் நன்றாக நடிப்பார், இவரை போல நடனம் ஆட முடியாது, இவரை போல நகைச்சுவை செய்ய முடியாது என்றெல்லாம் விஜயன் எண்ணத்தைப் பற்றி நம்மை சிந்திக்க வைத்தது எல்லாமே விஜய்யின் அப்பா தான் .
இது மட்டுமல்லாமல் விஜய் அவர்கள் இன்று 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து கொள்வதற்கு காரணமும் அதற்கு அடித்தளமிட்டதுமே விஜய் அவர்களின் அப்பா தான் என்று தனது X வலைத்தளத்தில் @metharsh 145 என்பவர் தற்போது பதிவிட்டுள்ளார்.
Full ப்ரோமோஷன்..
இதில் இவர் கூறியிருப்பதாவது தனது புரொடக்ஷனிலேயே விஜய் அவர்களை நடிக்க வைத்து தனது பணத்தையே கொடுத்து ப்ரொடக்ஷன் செய்ய சொல்லி அதில் விஜய் அவர்களுக்கு 100 கோடி சம்பளம் கொடுத்து உயர்த்தியது விஜய் அவர்களின் அப்பா சந்திரசேகர்தான்.
அதற்குப் பிறகுதான் சன் பிக்சர்ஸ் விஜய் அவர்களுக்கு 125 கோடி சம்பளம் கொடுத்தது இப்படி படிப்படியாக இவளுடைய சம்பளம் 200 கோடியை தாண்டி உச்சத்தை பெற்றது என இவர் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த விஷயங்களில் மட்டுமல்ல இன்று அரசியலில் கூட தனக்குத்தானே ப்ரமோஷன் செய்து கொள்கிறார் விஜய் என சுட்டிக்காட்டி உள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க எவ்வளவுதான் ஒருவரை பிரமோஷன் செய்து ஒரு நல்ல நிலையை அடைய செய்தாலும், அந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள அவரது திறமையும் அவரது நிலையான முயற்சியும் கைகொடுக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆக விஜய் அவர்கள் எவ்வளவு பிரமோஷன் கொடுத்து மேலே வந்திருந்தாலும் அவர் அடைந்த உச்சத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்க அவரது திறமையும் முயற்சியும்தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.