Blue Sattai Maran : ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் நேற்றைய தினம் வெளியான மாரீசன் படத்திற்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார். அதாவது திருடனாக இருக்கும் பகத் பாசில் ஒரு வீட்டுக்கு திருட செல்லும்போது அங்கு வடிவேலு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார்.
அதாவது வடிவேலுக்கு மறதி வியாதி இருப்பதால் அவரை வீட்டிலேயே கட்டி சென்று இருக்கிறார்களாம். தனது சங்கிலியை அவிழ்த்து விட்டால் பணம் தருவதாக பகத் பாசிலிடம் கூறுகிறார். எப்படி பணம் தருவாய் என்று கேட்பதற்கு வங்கியில் பணம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து ஏடிஎமுக்கு செல்லும்போது பின் நம்பரை வடிவேலு மறந்து விடுகிறார். ஆனால் அவரது அக்கவுண்டில் 25 லட்சம் பணம் இருப்பதை அறிந்த பகத் பாசில் எப்படியாவது இதை திருடி விட வேண்டும் என்று வடிவேலுவுடன் பின் தொடர்கிறார்.
மாரீசன் படத்திற்கு ப்ளூ சட்டை மாறக் கொடுத்த விமர்சனம்
பொதுவாகவே படங்களில் முதல் 20 நிமிடங்களில் படத்தின் மையக் கருத்தை சொல்லிவிட வேண்டும். ஆனால் ஒரு மணி நேரமாகவே இதுதான் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இடைவெளிக்கு பிறகு ஒரு ஃபிளாஷ்பேக் காட்சி வருகிறது.
வடிவேலுக்கு முன்பு ஒரு காலத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அதை பழிவாங்கும் படி தான் கதை அமைந்திருக்கிறது. முதல் பாதி நன்றாக இருந்தாலும் படத்திற்கு இது தேவையே இல்லாத ஒன்று என்று ப்ளூ சட்டை விமர்சனம் கொடுத்திருக்கிறார்.
மேலும் இரண்டாம் பாதியிலும் பல படங்களில் உள்ள காட்சிகளை தான் வைத்திருக்கிறார்கள். வடிவேலு மற்றும் பகத் பாசி இருவர் மட்டுமே படத்தின நன்றாக நடித்திருக்கிறார்கள். கோவை சரளா, விவேக் பிரசன்னா போன்றோரை தவறாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.
படத்தின் நேரத்தை குறைத்து, திரைக்கதையில் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்திருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும். மற்றபடி மாரீசன் படத்திற்கு சுமாரான மார்க்கை தான் ப்ளூ சட்டை மாறன் கொடுத்திருக்கிறார்.