Vijay : நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்ததும் போதும் செய்திளுக்கு பஞ்சமில்லை என்றேதான் கூறவேண்டும். சினிமாவில் இருந்ததை விட அரசியலுக்கு வந்தவுடன் தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார் என்று தோன்றும் அளவிற்கு அடுத்தடுத்த செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
தற்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டங்கள் ஆங்காங்கு நடைபெற்ற வண்ணம் இருந்து வருகின்றன. இதில் சட்ட சிக்கல்கள் இருந்தாலும் அதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் ஒரு சில இடங்களில் நாசுக்காக பிரச்சினை இல்லாமல் முடித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் என்னதான் பெரிய தலைவர்களாக இருந்தாலும், பெரிய நடிகர்களாக இருந்தாலும் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு விசுவாசத்தை தவிர, பணத்தாசையோ செய்ய பதவி ஆசையோ இருந்தால் அந்த கட்சி அணிந்துவிடும் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது.
தற்போது பதவிகளுக்கு ஆசைப்பட்டு தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் அடித்துக் கொண்டதை நாம் பார்த்தோம். கொஞ்சம் சங்கடமான சூழ்நிலைதான் இருந்தாலும் இதை எவ்வாறு விஜய் அவர்கள் சரி செய்ய போகிறார் என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விஷயம் தான். இதெல்லாம் தமிழக கட்சி கழகத்தின் தலைமை பார்த்துக் கொள்ளும்.
தேவையில்லாமல் ரசிகர்களை நம்பியிருக்க வேண்டாம்..
இவ்வாறு இருக்கையில் தற்போது வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் தமிழக வெற்றி கழகத்தை பற்றி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் ரசிகர்களை நம்பி விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கக் கூடாது.
டெபாசிட் கூட கிடைக்காது..
படத்தையே ஓட வைக்காத ரசிகர்கள், எப்படி ஓட்டு போட்டு விஜய் அவர்களை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க போகிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். எனக்கு தெரிந்து பல இடங்களில் டெபாசிட் கூட கிடைக்கப் போகவில்லை என வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் கூறியிருக்கிறார்.
இது தற்போது சர்ச்சையை கிளப்பும் விதமாக உள்ளது. இருப்பினும் வெளி கட்சிகள் சார்பாக ஒரு கட்சிக்கு பிரச்சனை வருவது என்பது சாதாரணம். கட்சி பெயரை தானே கெடுத்துக் கொள்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் என்பது தற்போது பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு செய்தி.
இதையெல்லாம் சரி செய்து திரும்பவும் நேர்மறையான பேச்சுகளுக்கு வருவார்களா “தமிழக கட்சி கழகம்”. ரசிகர்களை மட்டுமே நம்பி வந்த ஒருத்தரை ரசிகர்கள் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்பார்களா அல்லது கைவிடுவார்களா பொறுத்திருந்து பார்க்கலாம்.