Udhayanidhi: உதயநிதி ஸ்டாலின் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். ஆரம்ப காலகட்டத்தில் இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்று கூறி தயாரிப்பாளராக மாறினார்.
ஹீரோவாகும் வாய்ப்பு உண்டா என்று கேட்டதற்கு இல்லை என்று சொன்னார். ஆனால் அடுத்து ஹீரோவாக களம் இறங்கி பல படங்களில் நடித்தார். அதன் பிறகு அமைச்சர் துணை முதல்வர் என அடுத்தடுத்த பயணத்தை தொடங்கி விட்டார்.
அந்த வழியில் தன் மகனையும் கொண்டு செல்ல அவர் முடிவெடுத்திருக்கிறார். ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியின் முக்கிய பொறுப்பில் இன்ப நிதி இருப்பது அனைவருக்கும் தெரியும்.
மகனை வைத்து பிளான் போடும் உதயநிதி
அதேபோல் விரைவில் அரசியல் களம் காண்பார் என்ற தகவலும் இருக்கிறது. ஆனால் இப்போது வந்துள்ள தகவல் ஆச்சரியமாக இருக்கிறது. என்னவென்றால் உதயநிதியின் வாரிசு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக போகிறார்.
அந்த படத்தை இயக்குவது வேறு யாரும் கிடையாது மாரி செல்வராஜ் தான். மாமன்னன் படத்தின் மூலம் உதயநிதிக்கு அவருடன் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. தன்மகன் அவர் மூலம் அறிமுகமாக வேண்டும் என்பதை அவர் விரும்புகிறார்.
அதனால் மகனின் எதிர்காலத்தை மாரி செல்வராஜ் கையில் அவர் கொடுத்திருப்பதாக திரையுலக வட்டாரத்தில் இப்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவர் அடுத்ததாக தனுஷை வைத்து படம் எடுக்கப் போகிறார்.
அப்படி என்றால் இந்த படம் எப்போது தொடங்கும் என்ற மிகப்பெரும் கேள்வி இருக்கிறது. உண்மையில் தனுஷ் படம் முடிந்த பிறகு தான் அவர் இன்பநிதியை வைத்து படம் எடுக்க இருக்கிறார்.
அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஹீரோவாக தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது சரி அரசியலுக்கு என்ட்ரி டிக்கெட் சினிமா தான் என்பது நமக்கு தெரியாதா.