Saravanan : பாரதிகண்ணம்மா திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் சரவணன். அதன் பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிறகு சில படங்களில் நடித்தாலும், பெரும்பாலும் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.
அதன் பின் பல வருடங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார். துணை நடிகர் கதாபாத்திரத்தில் அசத்தலாக நடிக்கும் வல்லமை வாய்ந்தவர். இதன் மூலம் மீண்டும் திரையுலகில் கால் பதித்தார்.
டி ராஜேந்தர் காலத்தில் இருந்தே சரவணன் நடித்து வருகிறார் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. இருவரும் எதிர்பாராத வகையில் சந்தித்துக் கொண்டு போது டி ராஜேந்தர் சொல்லி விஷயம் சரவணன் வாழ்க்கையில் ஒரு பூகம்பத்தையே கொண்டு வந்தது என்று சொல்லலாம்.
சரவணன் பேட்டியில் கூறியதாவது, “டி ராஜேந்திரன் ஒரு முறை என்னை பார்த்து பிச்சை எடுக்க போகிற டா அப்படினு சொன்னாரு. இப்படி சொல்லறீங்களே அண்ணா ஏன்-னு கேட்ட, எனக்கு வரிசையில் 13 படங்கள் இருக்குனு நான் சொன்னேன்.
எவ்வளவு படம் இருந்தாலும் ஒருத்தன் கூட வாய்ப்பு தர மாட்டன் அப்படினு சொன்னாரு. அவரு சொன்ன மாதிரியே தான் நடந்தது. எனக்கு 29 வயசுக்கு மேல படம் எதுவும் வரல. அவரு சொன்ன மாதிரி 40 வயசுக்கு மேல தான் வாய்ப்பு வந்துச்சு-நடிகர் சரவணன்”. இப்படி சரவணன் பேட்டியில் பேசியுள்ளார்.
டி ராஜேந்திரன் பற்றி ஓப்பன் கொடுத்த சரவணன் பேட்டி தற்போது, வலைத்தளத்தில் காற்று தீ போல் பரவி வருகிறது. இதை பார்த்த இனையைவாசிகள் அவர்களது கருத்து நிலை நாட்டி வருகின்றனர்.