Anirudh : சமீபகாலமாக அனிருத்துக்கு போட்டியாக சாய் அபயங்கர் வந்துவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கிட்டத்தட்ட ஏழு படங்களில் சாய் அபயங்கர் கமிட் ஆகி விட்டார்.
அதுவும் எல்லாமே பெரிய நடிகர்களின் படங்கள். ஆகையால் அனிருத்துக்கு இனி வாய்ப்புகள் பெரிதாக இருக்காது என்று கூறப்பட்டது. இதனால் அனிருத்தை அழிக்க வந்த சாய் அபாயங்கர் என்ற செய்திகள் உலாவி வந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கிறார் விமர்சகர் ராஜகம்பீரன்.
அதாவது தமிழை அழித்ததே அனிருத் தான். அதாவது கண்ணதாசன் தொடங்கி வாலி, வைரமுத்து, கபிலன் என பலரும் தமிழை வளர்த்து நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறார்கள். குறிப்பாக தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்த வாலியை காப்பாற்றியதே கண்ணதாசன் வரிகள் தான்.
அனிருத்தை விமர்சித்த பிரபலம்
இதை வாலியே பலமுறை சொல்லி இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் தமிழை அழிக்கும் படி வார்த்தைகள் போட்டு இசையமைத்து வருகிறார் அனிருத். காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு தான் அவருடைய பாடல்கள் இருக்கிறது.
ஆகையால் அனிருத் போன்று இல்லாமல் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாய் அபயங்கர் இசையமைக்க வேண்டும் என்ற ராஜ கம்பீரன் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் இவ்வாறு ஆதங்கம்பட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது அனிருத்தை நேரடியாகவே தாக்கி பேசியிருக்கிறார். இதனால் அனிருத் ரசிகர்கள் ராஜகம்பீரன் மீது கோபத்தில் இருக்கின்றனர். மேலும் சமீபத்தில் சாய் அபயங்கர் இசை அமைத்த கருப்பு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.