Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் பிசினஸ்க்காக லோன் வாங்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். அதற்கு கேரண்டி கையெழுத்து போட வேண்டும் என்பதால் பாண்டியன் உதவி செய்துவிட்டார். இருந்தாலும் இன்னும் மீதம் பணம் தேவைப்படுகிறது என்ற காரணத்திற்காக கதிர் தெரிந்தவர்களிடம் பணம் கேட்கிறார்.
இதை தெரிந்து கொண்ட ராஜி, மீனாவிடம் கண்ணன் திருடிட்டு போன நகை போலீஸ் மூலம் எங்களுக்கு திரும்ப கிடைத்துவிட்டது. அந்த நகை தற்போது என்னிடம் தான் இருக்கிறது, அந்த நகையை அடகு வைத்து நான் கதிருக்கு பணம் கொடுத்து உதவ போகிறேன் என்று சொல்லி அடகு வைப்பதற்கு வங்கிக்கு போய்விட்டார். அப்படி அந்த நகையெல்லாம் கொடுத்து பணத்தை ரெடி பண்ணும் பொழுது சக்திவேலுக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது.
சக்திவேல் அந்த நகையெல்லாம் பார்த்து இது எங்க வீட்டு நகை என்று சொல்லி பணம் சாயங்காலம் வந்து வாங்கிட்டு போங்க என அனுப்பி வைத்து விடுங்கள் என சக்திவேல் சூழ்ச்சி செய்து விட்டார். பிறகு சக்திவேல் அந்த நகையே வாங்கிட்டு போயி வீட்டில் இருப்பவர்களிடம் தொலைந்து போய்விட்டது என்று கதை கட்டிய பாண்டியனின் மகன் நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறான்.
இந்த நகையை அடகு வைப்பதற்காக ராஜி நகைக்கடைக்கு வந்த விஷயத்தை சொல்லி பிரச்சினையை பெரிசாக்க போகிறார். இதனால் கதிர் மற்றும் பாண்டியன் குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் விதமாக சக்திவேல் சண்டை போட போகிறார். இந்த விஷயத்தை எல்லாம் பார்த்த ராஜி உண்மையை சொல்லும் விதமாக எல்லோரும் வாயும் அடைக்கப் போகிறார்.
அதாவது நீங்க நினைக்கிற மாதிரி நான் கதிரை காதலித்து கல்யாணம் பண்ணவில்லை. நான் கண்ணன் என்பவரை காதலித்து நம்பி ஏமாந்து போய் விட்டேன். அதன் பிறகு அத்தை என் நிலைமையை புரிந்து கொண்டு குடும்பத்திற்கும் எனக்கும் எந்தவித பங்கமும் வந்து விடக்கூடாது என்பதற்காக அவங்க பையனை என் கழுத்தில் தாலி கட்ட சொன்னார் என்ற கல்யாண ரகசியத்தை போட்டு உடைக்க போகிறார்.
இதனால் சக்திவேல்-வை தவிர மற்றவர்கள் அனைவரும் கதிரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப் போகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தை தனக்கு தெரியாமல் மறைத்து செய்த காரியத்திற்காக பாண்டியன், கோமதி மீது கோபப்பட போகிறார். இதனால் கோமதி பாண்டியனிடம் மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார்.