Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா நித்திஷ் விவாகரத்து போய்க் கொண்டிருக்கும் பட்சத்தில் சுதாகர் இனியாவுக்கு போன் பண்ணி ரெஸ்டாரண்டுக்கு வர சொன்னார். இனியா விவாகரத்து சுமூகமாக கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் சுதாகர் சொன்னதை நம்பி ரெஸ்டாரண்டுக்கு போய்விட்டார்.
ஆனால் அங்கே சுதாகர் இல்லை, அதற்கு பதிலாக நித்திஷ் சுயநினைவு இழக்கும்படி போ**தை மருந்துக்கு அடிமையாக இருந்தார். இப்படிப்பட்டவரை சந்தித்த இனியா, நித்திஷ்க்கும் வாக்குவாதத்தை தொடர்ந்து பிரச்சினை ஆகப் பார்த்தது. இதனால் நித்தேஷிடம் இருந்து தப்பிப்பதற்காக இனியா சும்மா சாதாரணமாக நித்தேஷை தள்ளிவிட்டார். இதனால் நித்தேசுக்கு எந்தவித அடியும் படவில்லை. ஆனால் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார்.
இதை பார்த்த இனியா, நித்தேஷ் இறந்து போய்விட்டார் என்ற பயத்தில் அங்கு இருந்து போய்விட்டு வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறார். அத்துடன் நித்தேஷ் இறந்துவிட்டார் என்று பத்திரிக்கையில் வெளிவந்ததன் மூலம் இனியா, நித்திஷ் இறந்ததற்கு நான் தான் காரணம் என்று போலீஸ் ஸ்டேஷனில் உண்மையை சொல்லி விடுகிறேன் என்று கிளம்புகிறார்.
ஆனால் கோபி, தேவையில்லாத விஷயத்தில் நீ தலையிட வேண்டாம். அம்மா அண்ணனை கூட்டிட்டு ஊருக்கு போ என்று எல்லாத்தையும் அனுப்பி வைத்து விடுகிறார். பிறகு வீட்டில் ஈஸ்வரி மற்றும் கோபி இருந்த பொழுது போலீஸ், இனியவை தேடி அங்கு வருகிறார்கள். இனிய எங்கே என்று போலீஸ் கேட்கும் பொழுது கோபி எதுவும் சொல்லாததால் கோபியை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார்கள்.
கோபி, இனியவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த கொலையை பண்ணியது நான்தான் என்று பொய் சொல்லி விடுகிறார். இதனால் பத்திரிக்கையில் நித்தீஷ் இறப்பிற்கு கோபி தான் என்று முடிவு பண்ணி எழுதி விடுகிறார்கள். இந்த செய்தியை தெரிந்து கொண்ட பாக்கியா இனியா எழில் மற்றும் செழியன் அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள்.
பிறகு கோபியை வெளியே எடுக்கும் முயற்சியில் எல்லோரும் இறங்கும் பொழுது தான் தெரிய வரப்போகிறது நித்திஷ் இறப்பிற்கு சுதாகர் தான் காரணம் என்று. அதாவது இந்த சம்பவத்தை எல்லாம் தெரிந்து கொண்ட சுதாகர், நித்தீஷ் உயிருடன் இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டார்.
ஆனால் இவனை காப்பாற்றி ஒரு பிரயோஜனமும் இல்லை. நமக்கு மானம் மரியாதை சொத்து வசதி தான் முக்கியம் என்பதற்காக சுதாகரை கொலை செய்து அந்த பழியை இனியா மீது போட்டால் எல்லாம் நம் கண்ட்ரோலுக்கு வந்து விடும் என்று பிளான் பண்ணி மகனை கொன்றிருக்கிறார். கடைசியில் இந்த உண்மை வெளிவரும் பொழுது சுதாகர் ஜெயிலுக்கு போய்விடுவார். கோபி வெளியே வந்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கப் போகிறார்.