Diwakar : வாட்டர் மெலன் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் பிசியோதெரபிஸ்ட்டான திவாகர் செய்யும் அக்கப்போர்கள் தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது சூர்யாவின் கஜினி படத்தில் இடம்பெற்ற வாட்டர் மெலன் காட்சியை நடித்து பிரபலமடைந்தார் திவாகர்.
இதைத் தொடர்ந்து கர்ணன் படத்தில் சிவாஜி போன்ற சில கதாபாத்திரங்களை நடித்து காண்பித்தார். குறிப்பாக படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டர் வாசலில் இவர் கொடுக்கும் கமெண்ட் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இதன் மூலம் பிரபலமான திவாகரை நோட்ஸ் கட் செய்திருக்கிறார் தொகுப்பாளர் ஒருவர்.
அதாவது பிரபல ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுக்க வந்த திவாகரிடம் முதல் கேள்வியை தொகுப்பாளர் முன்வைத்தார். அதாவது நிஜ வாழ்க்கையில் நடக்க முடியாத சில விஷயங்களை கனவாக நினைத்து வாழ்வார்கள். அவ்வாறு நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆதங்கப்பட்ட திவாகர் உடனடியாக கோபப்பட்டு கத்த ஆரம்பித்து விட்டார்.
திவாகரை வச்சி செய்த தொகுப்பாளர்
அதாவது தன்னை இதுபோன்ற கேள்விகள் கேட்க வேண்டாம் என்று பேட்டி எடுப்பதற்கு முன்பே கூறியிருக்கிறேன். அப்படி இருக்கும்போது வேறு உலகத்தில் தான் இருப்பதாக எப்படி தொகுப்பாளர் கேட்கலாம் என்று காண்டாகிவிட்டார்.
அவர் பேசுவதை கேட்டு கோபப்பட்ட தொகுப்பாளர் பேட்டியில் என்ன உங்கள சிவாஜி மாறி, சூர்யா மாதிரி நடிக்க சொல்வார்கள் என்று எதிர்பார்த்தீர்களா. நீங்க கொடுக்கிற கேள்வியை தான் கேட்க வேண்டுமா, முதல்ல மைக்கை கழட்டி வச்சிட்டு போங்க என்று கோபமாக கத்தி விட்டார்.
அதன் பிறகு மக்கள் முன் பேசிய தொகுப்பாளர், இது போன்ற ஆட்கள் கோமாளித்தனமாக பண்ணுவதை பார்த்து மக்கள் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை ஒரு பெரிய ஆள் போல நினைக்க வைத்து விடுகிறார்கள். அதன் விளைவாகத்தான் இப்போது திவாகர் சூர்யாவுக்கு மேல நான் என்று நினைச்சுகிட்டு இருக்காரு என ஆதங்கப்பட்டு பேசி இருக்கிறார்.