Memes: ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் கொதிப்படைய வைத்த சம்பவம் என்றால் அது குன்றத்தூர் பிரியாணி அபிராமி வழக்கு தான். முறையற்ற உறவுக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற பத்தினி தாய் தான் இவர்.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அபிராமியும் அவருடைய காதலன் மீனாட்சி சுந்தரமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சமீபத்தில் தீர்ப்பானது.

அதில் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கொடுத்தார். இப்போது தான் நமக்கு நிம்மதியாக இருக்கிறது. இப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றிய அபிராமிக்கு இந்த தண்டனை தேவை தான்.

தூக்கு தண்டனை கொடுத்திருந்தால் கூட அவர் நிம்மதியாக போயிருப்பார். ஆனால் அப்படி இருக்கக் கூடாது. செய்த தவறை பற்றி அவர் தினம் தினம் நினைத்து வருந்த வேண்டும் என்பதற்காகவே ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள் என மக்களும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட அபிராமி இதற்கெல்லாம் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. ஜெயிலுக்குள்ளேயே இருந்து சாகப் போகிறோமே என்ற கவலை தான் அவருக்கு இருக்கிறது.

எப்படியும் குறைந்தபட்ச தண்டனையோடு வெளியில் சென்று விடலாம் என்று அவர் நினைத்திருப்பார் போல. அதனால் தான் தீர்ப்பு நாளில் நெயில் பாலிஷ் தலையலங்காரம் கிளிப் என ஸ்டைலாக வந்திருந்தார்.

இதை பார்க்க பார்க்க எல்லோருக்கும் பற்றி கொண்டு வந்தது. அதை நெட்டிசன்கள் மீம்ஸ் கமெண்ட் போட்டு கிழித்து வருகின்றனர். நீ ஜெயில்ல இருந்து வரியா இல்ல ஃபங்ஷன் வீட்ல இருந்து வரியா எப்படி இந்த மாதிரி அலங்காரம் எல்லாம் செய்ய முடியுது.
ஜெயில்ல உனக்கு நல்ல வாழ்க்கை போல. கொஞ்சம் கூட தோற்றத்தில் மாற்றமே இல்லை எப்படி போனியோ அப்படியே வந்து இருக்க என சோசியல் மீடியாவில் அபிராமியை கிழித்து தொங்க விடுகின்றனர். மேலும் சில மீம்ஸ் கூட வைரலாகி வருகிறது. அது பற்றிய தொகுப்பு இதோ.