Sam CS : இசையமைப்பாளர் சாம் CS ஒரு பிரபலமான இசையமைப்பாளர் என்றே நமக்கு தெரியும். இதையும் தாண்டி இவர் ஒரு பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர். இவர் தற்போது நிறைய நேர்காணல் என ஒரு சில ஸ்வாரஸ்யமான் விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இவர் தற்போது நிறைய படங்களை ஏன் செய்யவில்லை காரணம் ந்த இசையமைப்பாளர், புதிதாக வந்த இசையமைப்பாளர் என ஏகப்பட்ட பிரச்சினை இடையில் எழுந்து, அதெல்லாம் இல்லை என மறுத்து இவர் சில நேர்காணல் அளித்துள்ளார்.
மகாவதார நரசிம்மா படத்தை யாரும் மதிக்கல..
அவர் தற்போது அளித்த நேர்காணல் ஒன்றில் மஹாவதார நரசிம்மன் படத்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இவர் இந்த படத்தை யாரும் மதிக்கவில்லை. இந்த படத்தை ஒரு “சோட்டா பீம்” போல நினைத்து வருகிறார்கள்.
ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆகி அதற்கான வரவேற்பை அதுவே பெற்றுக்கொள்ளும் என சாம் CS கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நரசிம்மனின் ஒரு அவதாரம் மட்டுமே எடுத்துள்ளதாகவும் இன்னும் 9 அவதாரங்கள் இருப்பதாகவும்.
இந்த படத்துக்கு மிகப்பெரிய plan..
இந்த 9 அவதாரங்களையும் படம் எடுக்க போவதாக இந்த படக்குழு அறிவித்துள்ளது. ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒரு படம் என ரிலீஸ் செய்ய போகிறார்களாம். கிட்டத்தட்ட “2040″ வரை இந்த படம் தொடர்ந்து ரிலீஸ் செய்ய திட்டம் தீட்டிருக்கிறார்களாம்.
அந்த அளவிற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்றால் இந்த படத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பார்கள் என்று சாம் CS அவர்கள் கூறியுள்ளார். கண்டிப்பாக இந்த படம் ஹிட் அடிக்கும் என்பதையும் கூறியுள்ளார்.