Vijay Devarakonda : ஜெர்சி படத்தின் இயக்குனர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவராகொண்ட நடிப்பில் உருவாகி இருக்கிறது கிங்டம் படம். இது ஜூலை 31ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் விஜய் தேவராகொண்டா அண்டர் கவர் மிஷன் வீரனாக நடித்திருக்கிறார். குறிப்பாக சத்யதேவ் நடித்த சிவா என்ற மிரட்டலான காட்சியை விஜய் தேவராகொண்டா கண் முன் காட்டி இருக்கிறார்.
ட்ரைலர் மாஸ் திரில்லர் பாணியை கொண்டிருக்கிறது. அதாவது சகோதரர் இடையே மோதல் மற்றும் உறவுகள் ஆராயும்படியான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் குண்டு வெடிப்பு போன்ற அதிரடியான காட்சிகள் காண்பிக்கப்பட்டிருக்கிறது.
விஜய் தேவர் கொண்டாவின் கிங்டம் விமர்சனம்
மேலும் டிரைலரில் அனிருத் இசை மெய்சிலிர்க்க வைக்கிறது. ராட்சசர்களின் ராஜாவாக மாறிவிட்டான் போன்ற வசனங்களும் அல்டிமேட் ஆக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் விஜய் தேவரா கொண்ட ஒரு தரமான கம்பேக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தேவர் கொண்டாடும் மிரட்டலாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் எப்போது படத்தைப் பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் டிரைலர் வெளியாகி 12 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது.
ஆகையால் கிங்டம் படம் தியேட்டரில் சரவெடியாக வெடிக்க இருக்கிறது. ரசிகர்கள் ஒரு மாஸ் படத்தை பார்க்க காத்திருங்கள் என்பது போல தான் கிங்டம் டிரைலர் அமைந்திருக்கிறது.