Coolie: சூப்பர் ஸ்டார் சன் பிக்சர்ஸ் கூட்டணியின் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பான் இந்தியா படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அதை தாண்டி முதல் ஆயிரம் கோடி வசூலித்த தமிழ் படம் என்ற பெருமையை தட்டுமா என்ற கேள்வியும் உள்ளது.
ஏனென்றால் வார் 2 படமும் அதே நாளில் தான் ரிலீஸ் ஆகிறது. அதனால் கொஞ்சம் அடக்கி வாசிப்போம். ஓவர் பில்டப் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள தயார் இல்லை என சன் பிக்சர்ஸ் முடிவு செய்துவிட்டது.
லோகேஷுக்கு சுடச்சுட ஒரு கேள்வி
லோகேஷின் மனநிலையும் அதுதான். நீங்க ஆயிரம் கோடின்னு உசுப்பேத்திட்டு போயிடுவீங்க. கடைசில பதில் சொல்ற ஆள் நானா தான் இருக்கும் என வெளிப்படையாகவே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுவே பிரமோஷனை குறைத்ததற்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழலில் படத்துக்கு குத்துப்பாட்டு தேவையா? படம் ஓடணும்னு இதன் மூலம் ரசிகர்களை வரவைக்க நினைக்கிறார்களா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் லோகேஷ்க்கு கதை மீது நம்பிக்கை இல்லையா ஐட்டம் சாங் வைத்து தான் வசூலை அதிகரிக்கணுமா என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. உண்மையில் இப்போது கமர்சியல் படங்களை தான் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.
இது போன்ற சில மசாலாக்களை கலந்தால் மட்டும் தான் ஆடியன்ஸ் விரும்பி பார்க்கின்றனர். அதன் காரணமாகவே மோனிகா பாடல் வைக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இன்றி ஜெயிலர் படத்தில் தமன்னாவின் ஆட்டம் பெரும் பிளஸ் ஆக இருந்தது அதுவும் கூட காரணமாக இருக்கலாம் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.