சிம்பு கமிட்டான அடுத்தடுத்த படங்கள் பிரச்சனையில் தவித்து வருகிறது. 2021 மாநாடு படத்திற்கு பின் நான்கு வருடங்களாக 4 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். மகா, வெந்து சரிந்தது காடு, பத்து தலை, தக்லைஃப் என நடித்தும் எதுவும் கை கொடுக்கவில்லை.
அதுவும் 2023 ஆம் ஆண்டு பத்து தல படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்து தான் அவருக்கு தக்லைஃப் படமே ரிலீஸ் ஆனது. ஆக மொத்தம் கடந்த சில வருடங்களாகவே அவர் ஹிட் படங்கள் கொடுக்காமல் திணறி வருகிறார். இப்பொழுது எஸ்டிஆர் 48, 49, 51 என படங்களை வரிசையாக கமிட் செய்து வைத்திருக்கிறார்.
இதில் 50ஆவது படத்தை மட்டும் அவரே இயக்கிய நடிப்பதாக ஒரு திட்டம் இருக்கிறது அதனால் அது மட்டும் லிஸ்டில் இல்லை. இப்பொழுது வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் சிம்பு நடிப்பதாக இருந்ததும் கை மீறி போவதாக தெரிகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கவிருந்தார்.
ஆரம்பத்தில் இந்த படத்திற்கு முதலில் பத்து கோடிகள் வாங்கிவிட்டு profit share கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் தானு தரப்பில் சம்மதம் கிடைத்தது. ஆனால் இப்பொழுது 45 கோடிகள் சம்பளம் வேண்டும் என்று கேட்டு அதிர வைத்துள்ளார்.
வெற்றிமாறன் சம்பளம், சிம்பு சம்பளம் என இந்த படத்துக்கு பட்ஜெட்டே 120 கோடிகளுக்கு மேல் வந்துவிடும். படம் நன்றாக லாபம் தந்தால் சம்பளத்தை அள்ளிக் கொடுப்பவர் தானு. ஆனால் அவரை சிம்பு பல் பிடித்துப் பார்க்கிறார். இதனால் இந்த படம் ட்ராப் ஆகும் நிலையில் இருக்கிறது.
தயாரிப்பாளர் தானு பல நடிகர்களுக்கு காட்பாதர் போன்றவர். தனுஷ் பிரச்சனையில் இருக்கும்போது அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவியவர். பல நடிகை நடிகர்களை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றியவர் தானு. இப்படி ஒரு காட்பாதரை சீண்டிப் பார்த்து வருகிறார் சிம்பு.