Anna : ஜீ தமிழ் டிவியில் பயங்கரமான சதித் திட்டங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் சீரியல் அண்ணா. டிஆர்பி ரெட்டிங்கில் தற்போது இந்த சீரியல் ஒரு இடத்தை பிடித்துள்ளது. நடக்கும் அடுத்த சதி திட்டம் என்ன? அடுத்தடுத்த விறுவிறுப்பான சம்பவங்களை பார்க்கலாம்.
திருமணம் நடக்குமா..?
தற்போது தான் ரத்னா மற்றும் வீராவிற்கு நலங்கு கொண்டாட்டங்கள் நல்லபடியாக முடிந்தது. தன் தங்கைகளுக்கு திருமணமாக போவதை எண்ணி சந்தோசத்தில், சண்முகம் இருந்தாலும் இன்னொரு பக்கம் எந்தக் குறையும் இல்லாமல் எதிரிகளின் தொல்லை இல்லாமல் நடக்க வேண்டும் என்று என்பது இன்னொரு யோசனையாக இருந்து வந்தது.
பல நாட்களாக வெங்கடேசன் மற்றும் விஜயந்தியின் சதியால் ரத்னா மருமகளாக வேண்டாம் என்று வெறுத்த அறிவழவனின் அப்பா தற்போது மனம் மாறிவிட்டார். இந்த மனம் மாற்றம் சண்முகத்திற்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
அறிவுக்கு வரும் ஆபத்து..
இந்நிலையில் அறிவழகன் மண்டபத்தில் வைத்து ரத்னாவை பற்றி புகழாரம் சூட்டினான். இப்போது மாலதி அறிவழகனை தொடர்பு கொண்டு, உங்கள் காதலை நான் புரிந்து கொண்டேன் என்று கூறுகிறாள். இதெல்லாம் எதற்கு என்று கோபத்துடன் கேட்கிறான் அறிவழகன்.
நான் உங்களிடம் பத்து நிமிடம் பேச வேண்டும் என்று போராடுகிறாள். அழுது கொண்டே இருக்கும் அழுது கொண்டிருக்கும் மாலதியின் பேச்சை அறிவழகன் என்று கேட்க தயாராக இல்லை. அறிவழகன் மாலதியும் பேசுவதை கதவு ஓரம் நின்று விஜயந்தி ஒட்டு கேட்கிறாள்.
பத்து நிமிடம் பேசினால் போதும் எனக்கு டைம் இல்லை என்று கூறுகிறாள் மாலதி. ஒருவழியாக நான் வருகிறேன் என்று ஒத்துக் கொள்கிறான் அறிவு. இதை விட்டுக் கேட்டுக் கொண்டிருந்த விஜயந்தி உடனே வெங்கடேஷுக்கு கால் பண்ணி நடந்ததை கூறுகிறாள். நீ உடனே வா என்று கூறும் போது எப்படி வர முடியும் என்று கேட்கிறான் வெங்கடேசன். திருமணம் நடக்குமா நடக்காதா என்ற சூழல் டிக் டிக் நிலையை கடந்து வருகிறது அண்ணா.