Dhanush : நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது சினிமாத்துறையில் நீங்க இடத்துடன் தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கையாகவும் இருந்து வருகிறார். இவரின் அடுத்தடுத்த படங்கள் நல்ல ஹிட் கொடுக்க மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார்.
இவரின் படம் பொதுவாக பெரும்பாலன படங்கள் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாம் பாகம் தயாரித்தால் நல்லா இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் தான் புதுப்பேட்டை.
தனுஷின் அரசியல் களம்..
நாம் அனைவரும் எதிர்பார்த்தது போல புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளார்களாம். இந்த புதுப்பேட்டை படம் தனுஷின் சினிமா வாழ்க்கைக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.
இதில் சாதாரண ரவுடி போல் இருந்து பின் gangster ஆகி அதற்குப் பிறகு அரசியல் களத்தில் இறங்கும் தனுஷ் இதுபோலத்தான் இந்த படம் இருக்கும். பிறகு கிளைமாக்ஸ் அனைவரையும் கண்கலங்க வைத்து விடும். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது போல் ஆகிவிடும் கிளைமேக்ஸ்.
ஆனால் இந்த படம் இந்த படத்தில் உள்ள வசனங்கள் காட்சிகள் என அனைத்துமே பிரபலமாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலைப்புலி தானு தயாரிப்பதாகவும், இயக்குனர் செல்வராகவன் இயக்க உள்ளதாகவும், முழுக்க முழுக்க கொக்கி குமாரின் அரசியல் பயணத்தை மையக் கதையாகக் கொண்டு இந்த படத்தை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொறுத்திருந்து பார்க்கலாம் புதுப்பேட்டை தனுஷ் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது போல் புதுப்பேட்டை-2ம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தருமா? இதில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தால், அரசியல் மாற்றத்தை பற்றி சில கருத்துக்களை முன்வைத்து பேசுவாரா தனுஷ் பொறுத்து இருந்து பார்க்கலாம்.