Vijay : சினிமாவில் இருந்து அரசியலுக்கு விஜய் தாவியதும் மக்கள் ஒரே புலம்பல் தான். 2026 அரசியலில் விஜய் களம் இறங்குவாரா இல்லை அதோடு முடித்து விடுவாரா என்று தான் பேச்சு தற்போது வரையிலும் பேசப்பட்டு வருகிறது.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணத்தோடு தவெக கட்சியை ஆரம்பித்த பிறகு, அவர் அமைதியான பேச்சு தற்போது அரசியல் சத்தமாக தமிழ்நாட்டில் ஒலிக்கிறது. ரசிகர்களே ஆதரவாளர்களாக திரண்டு வருகின்றனர்.
ஊழல் சாதி இவைகளை எல்லாம் தவிர்த்து ஒரு சமமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது விஜயின் அரசியல் பேச்சாக உள்ளது. கல்வி, வேலை, சமூகப் பொறுப்பான வேலைகளில் இளைஞர்களின் நிச்சயம் பணியாற்ற வேண்டும் என்பது விஜய்யின் வேண்டுகோளாக இருக்கிறது.
பழைய அரசியல் கலாச்சாரத்தை மாற்றும் வகையில் விஜயின் அரசியல் பயணம் தற்போது தொடங்கியுள்ளது. கல்வி கட்டணம், அரசுப் பள்ளிக்கான திட்டம், போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் வழி மற்றும் மக்களை நேரடியாக சந்தித்து பேசும் பாணி போன்றவை தற்போது அரசியலில் துவக்கிய பாதையாகும்.
2024 துவக்கத்திலேயே விஜய் கூறியதாவது “நான் அரசியலுக்குள் வருவது மக்களுக்காக மட்டும் இல்ல ஒரு மாற்றத்திற்காகவும் சமூகத்திற்காகவும் தான்“. இன்று விஜய் கூறியது இன்றளவும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் கூட்டத்தில் பேசப்பட்டு வரும் பொருளாக தான் இருக்கிறது.
2026 இல் தேர்தலில் விஜய் அரசியலில் தனது கட்சிக் கொடியை நிலை நாட்டுவரா?இல்லையா? என்பதுதான் பலரின் கேள்வியாகவே இருக்கிறது. ஒருவேளை அடுத்த வருட தேர்தலில் விஜய் ஜெயிக்க முடியாவிட்டாலும், அதிமுக அல்லது பாஜகாவில் கமலஹாசன் மாதிரி எம்பி ஆகும் வாய்ப்பு விஜய்க்கு காத்திருக்கிறது என்று அரசியல் வட்டார பேச்சுகள் எழுந்துள்ளது.