Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. 500 எபிசோடுகளுக்கு மேலாக சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த அந்த தருணம் தான் இன்று இந்த ப்ரோமோவில் நடந்து இருக்கிறது.
அம்மாவின் கனவை நிறைவேற்ற அப்பா போட்டோ முன்பு இருக்கும் தாலியை ஆனந்தி கழுத்தில் கட்டுவேன் என சபதமிட்டு செவரக்கோட்டை மண்ணை மிதித்தான் அன்பு.
அன்பு தாலி கட்டிய அந்த தருணம்
கோகிலா திருமணத்தில் எத்தனையோ சிக்கல்கள், பிரச்சனைகள் இதைத் தாண்டி இரண்டு பேரின் திருமணம் நடைபெறுமா என்பதே பெரிய சந்தேகமாக இருந்தது.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோகிலா கழுத்தில் சரவணன் தாலி கட்டும் அதே நேரத்தில் தன்னுடைய சட்டை பாக்கெட்டில் இருந்து தாலியை எடுத்து அன்பு ஆனந்திக்கு கட்டுகிறான். பேர் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ஆனந்தி குடும்பத்தினரிடம் நானும் ஆனந்தியும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறோம்.
இப்போது நடந்தது கோகிலா சரவணன் திருமணம் மட்டும் இல்லை, எங்களுடைய திருமணமும் தான் என்று சொல்கிறான். மேலும் லலிதாவிடம் என்ன அம்மா உன்னோட கனவு நிறைவேறுகிற மாதிரி ஆனந்தி உன் வீட்டு மருமகளாய் ஆகிவிட்டால் போதுமா என்று கேட்கிறான்.
அன்புவின் அம்மா மற்றும் துளசி இருவரும் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்கள். இப்போதைக்கு ஆனந்தி கழுத்தில் அன்பு தாலி கட்டியது நிஜமாக நடக்குமா அல்லது வழக்கம் போல கனவா என்பது மட்டும்தான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இதற்கான விடையை இன்றைய எபிசோடில் பொறுத்திருந்து பார்க்கலாம்.