Cinema : சினிமாவில் இன்று ஒரு படத்தால் ஹிட் ஆகி டாப்பில் இருக்கும் நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால் என்னதான் டாப் ஹீரோவாக இருந்தாலும் ஒரு சில படங்கள் கை கொடுக்காமல் போகிறது. அப்படி நல்ல படங்களை மிஸ் பண்ணிய நடிகர்கள் மற்றும் படங்களை பற்றி பார்ப்போம்.
கமல்ஹாசன் :
உலகநாயகன் என்ற பட்டத்தால் சினிமாவில் வலம் வரும் நாயகன் கமல்ஹாசன். இவர் பல டாப் படங்களை கொடுத்திருந்தாலும், பல வருடங்களுக்கு முன்பில் இருந்து மருதநாயகம் என்ற திரைப்படத்தை திரையிட முயற்சி செய்து வருகிறார்.
இந்தத் திரைப்படம் பாதியில் நின்றதுக்கு முக்கியமான காரணம் பட்ஜெட் தான். இதைத்தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மர்மயோகி என்ற திரைப்படமும் ஆரம்பித்து கைவிடப்பட்டது.
அஜித் :
அஜித் நடிக்கும் எல்லா படமும் அவரக்கு கை கொடுப்பதில்லை. அவர் தொடர முடியாமல் விட்ட திரைப்படங்களும் இருக்கின்றது. சுராங்கனி என்ற திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கதை தாமதம் காரணமாக படம் கையடப்பட்டது.
விக்ரம் :
ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விக்ரம் இதுவரைக்கும் இரண்டு படங்களை தவற விட்டிருக்கிறார். பிதாமகன் பாகம்-2 மற்றும் கரிகாலன் திரைப்படம். இது விக்ரம் மனதில் ஒரு ஏக்கமாகவே பதிந்தது. பிதாமகன் பாகம் 2 வெளியாகி இருந்தால் நிச்சயம் டாப் இடத்தை பிடித்திருக்கும்
ரஜினி :
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தொடரப்பட்ட லால்குடி என்ற திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. கதை சரியில்லாத காரணத்தினால் ரஜினிக்கு இந்த திரைப்படம் தவறி போனது. இன்றளவும் இப்படத்தை பற்றின பேச்சு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
விஜய் :
முதலில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருந்த ஆதாயம் ஒன்று திரைப்படத்தை தயாரிப்பாளர்களின் மோதலால் விஜய் கைவிட்டார். இதைத்தொடர்ந்து அட்லியின் இயக்கத்தில் உறவாக இருந்த தளபதி 68 திரைப்படத்தையும் மிஸ் செய்தார் விஜய்.