Ayyanar Thuani Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா அப்பா அம்மா அண்ணன் என அனைவரையும் கண்மூடித்தனமாக நம்பி வீட்டிற்கு சோழனை கூட்டிட்டு வந்தார். ஆனால் சோழனை எப்படியாவது நிலவிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று திட்டமிடும் மனோகரின் பிளானை புரிந்து கொள்ளாத நிலா அப்பாவிடம் பாசமாகவும் உரிமையாகவும் நடந்து கொள்கிறார்.
அந்த வகையில் வீட்டில் இருப்பவர்களுக்கு டீ போட்டு கொடுத்து சேரன் அண்ணா கற்றுக் கொடுத்தது சொல்லி அந்த குடும்பத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பில் இருக்கும் மனோகர் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தும் விதமாக அண்ணன் காலில் அடிபட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு முக்கியமான வெளியே முடிக்க வேண்டும் என்று சொல்லி சோழனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
தோழன் ஆரம்பத்தில் யோசித்தாலும் நிலா சொல்வதை கேட்டதும் சரி என்று சொல்லி பணத்தையும் நகையும் எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறார். அடுத்ததாக வேலை பார்க்கும் இடத்தில் சேரன் அனீஸ் இருவரும் சாப்பிட ஆரம்பிக்கும் பொழுது அனிசின் தங்கை சாந்தோணி சாப்பாடு எடுத்துட்டு வந்து சேரனுக்கும் அண்ணனுக்கும் கொடுக்கிறார். அப்பொழுது அனைவரும் சேர்ந்து பேசிக் கொண்டே சாப்பிடுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து வானதி பாண்டியனுக்கு போன் பண்ணி பேசிக்கொண்டே இருக்கிறார். இந்த சூழ்நிலையில் காரில் பணத்தை எடுத்துட்டு வரும் சோழனுக்கு மாமனார் மீது கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது. நிலாவுக்காக இந்த வேலையை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்று போய்க்கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் மனோகர் போட்ட பிளான் படி சோழன் காரை விட்டு இறங்கியதும் அதில் இருக்கும் பணத்தை ஆட்கள் எடுத்துட்டு போய் விடுகிறார்கள்.
இதோடு விடாமல் சோழனையும் கட்டிப்போட்டு காரில் கூட்டிட்டு போய் விடுகிறார்கள். இதனால் சோழன் நிலாவிடம் சொல்லவும் முடியாமல் பேசவும் முடியாமல் போன் சுவிட்ச் ஆப் ஆகி விடுகிறது. இன்னும் பணம் போக வேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லை என்று நிலாவின் அண்ணன் சொன்னதும் மனோகர் நிலாவிடம் சோழனுக்கு போன் பண்ணி பார்க்க சொல்கிறார். உடனே நிலா சோழனுக்கு போன் பண்ணுகிறார், ஆனால் சுவிட்ச் ஆப் என்று சொல்லியதும் சோழன் மீது பழி போடும் விதமாக நிலாவின் அண்ணன் பேசுகிறார்.
ஆனால் நிச்சயம் சோழன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார் என்று புரிந்து கொண்டு சேரன் பாண்டியன் பல்லவன் மாஸாக என்டரி கொடுத்து சோழனை காப்பாற்றி மாமனார் வீட்டுக்கு அனைவரும் கூட்டிட்டு வருவார்கள்.