Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், பணத்தை எடுத்துட்டு போகும் சோழன் காரை வழிமறித்து மனோகரின் ஆட்கள் நகையும் பணத்தையும் எடுத்துட்டு போய் விடுகிறார்கள். அதோடு சோழனையும் கட்டிக் கொண்டு ஒரு இடத்தில் அடைத்து விடுகிறார்கள். இது எதுவும் தெரியாமல் நிலா, குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்.
பிறகு நிலாவின் அண்ணன், சோழன் போக வேண்டிய இடத்திற்கு இன்னும் போய் சேரவில்லை. போனும் போக மாட்டேங்குது என்று சோழன் மீது பழி போடும் விதமாக பேசுகிறார். உடனே நிலா, சோழனுக்கு போன் பண்ணி பார்க்கிறார். ஆனால் போன் சுவிட்ச் ஆஃப் என்று சொல்வதால் மொத்த குடும்பமும் சோழன் தான் நகையும் பணத்தையும் திருடிட்டு போயிருப்பான்.
அவனை சும்மா விடக்கூடாது என்று சொல்லி நிலாவை நம்ப வைக்க டிராமா போடுகிறார்கள். ஆனால் நிலா, சோழன் அப்படிப்பட்ட ஆள் கிடையாது, நிச்சயம் அந்த மாதிரி ஒரு காரியத்தை பண்ணியிருக்க மாட்டான். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லிய பொழுது நிலாவின் அம்மா, அப்பா, அண்ணன் என அனைவரும் சேரன் வீட்டிற்கு சென்று பார்க்கலாம்.
நகையும் பணத்தையும் எடுத்துட்டு குடும்பத்துடன் எங்கேயாவது போகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். உடனே நிலா, நீங்க யாரும் அங்க போக வேண்டாம். நானே போன் பண்ணி கேட்கிறேன் என்று போன் பண்ண போய் விடுகிறார். நிலாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது என்று நினைத்து மனோகர், அண்ணன், அம்மா என அனைவரும் சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார்கள்.
இன்னொரு பக்கம் மனோகரின் ஆட்கள் சோழனை கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் சோழன் எப்படியாவது அங்கே இருந்து அண்ணனுக்கும் தம்பிக்கும் தகவலை கொடுத்து விடுவார். அதன்படி குடும்பமாக களம் இறங்கி சோழனை காப்பாற்றி நிலாவுக்கு நடந்த விஷயத்தை புரிய வைக்கப் போகிறார்கள்.