Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் தான் நெடுந்தொடராக கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் ஓடி இருக்கிறது. இதற்கு ஒரு எண்டே இல்லையா என்று கேட்கும் அளவிற்கு கதை சொதப்பலாக இருந்த பொழுதும் கடந்த சில மாதங்களாக இழுத்து அடித்தார்கள். தற்போது எல்லாத்தையும் மூட்ட முடுச்சு கட்டும் நேரம் வந்துவிட்டது என்பதற்கு ஏற்ப பாக்கியலட்சுமி சீரியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஓட முடிய போகிறது.
இந்த சூழ்நிலையில் நித்தேஷை கொலை பண்ணிய பழி, இனியா மீது விழுந்து விடக்கூடாது என்பதற்காக கோபி பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு போய் விட்டார். இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது என்று புரிந்து கொண்ட பாக்யா உண்மையை கண்டுபிடிக்கும் விதமாக ஆதாரத்தை ஆகாஷ் உதவியுடன் தெரிந்து கொண்டார். அந்த வகையில் எல்லா ஆதாரத்தையும் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுட்டு போய் கொடுத்து விடுகிறார்.
இதனால் நித்தீஷ் அம்மாவுக்கும் பாக்கியா உண்மையை புரிய வைத்துவிட்டார். அந்த வகையில் சுதாகர் கையும் களவுமாக போலீசிடம் மாட்டிக் கொள்ளப் போகிறார். இதனால் இனியாவிற்கும் பாக்கிய குடும்பத்திற்கும் இருந்த மிகப்பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆகாஷ் ஐஎஸ் எக்ஸாமில் பாஸ் பண்ணி விடுகிறார்.

உடனே பாக்கியா குடும்பத்தில் இருப்பவர்கள் இனியாவுக்கு ஆகாசுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவு எடுக்கிறார்கள். அந்த வகையில் ஊரையே கூட்டி இனிய ஆகாஷுக்கு திருமணத்தை பண்ணி வைக்கிறார்கள். இதில் கலந்து கொள்வதற்கு ராதிகா மற்றும் மயுவும் வந்து விடுகிறார்கள். அத்துடன் எல்லோரும் குடும்பமாக ஒரே மேடையில் நின்று சந்தோஷமாக விடை பெறுவது போல் பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து தனம் பாக்கியம் என்ற சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் புதுசாக வரப்போகிறது.