Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோ சீரியல் நேயர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனந்தி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதால் ஊர் பஞ்சாயத்து கூடி அவளிடம் விசாரணை நடக்கிறது. இந்த பஞ்சாயத்துக்கு முன்பே அன்பு ஆனந்தியை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தான். ஆனால் அன்புவின் அம்மா லலிதா அதற்கு சம்மதிக்கவே இல்லை.
பஞ்சாயத்தில் நிற்கும் ஆனந்தி
இந்த நிலையில் தான் ஊர் பஞ்சாயத்தில் ஆனந்தியின் அம்மா ஆனந்தியிடம் கர்ப்பத்திற்கு காரணம் அன்பு தான் என்று சொல்லு என கெஞ்சுகிறார். ஆனால் ஆனந்தி தன்னால் அன்புவின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்று அன்பு இதற்கு காரணமே கிடையாது என்று சொல்கிறாள்.
உடனே சுயம்புலிங்கம் நக்கலாக அன்பு காரணமில்லை என்றால் யாரு மகேஷ் தான் காரணமா என கேட்கிறான். இதற்கு ஆனந்தி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியும். ஆனந்தி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் அன்பு அவளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறான்.
ஆனால் எந்த விதத்திலும் அன்புவை ஏமாற்றி விடக்கூடாது என ஆனந்தி நினைக்கிறாள். அதே நேரத்தில் தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை அவளே இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பஞ்சாயத்து ஒன்று கூடி இருக்கும் இடத்தில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று உண்மை ஹாஸ்டல் வார்டன் மனோன்மணி மூலம் வெளியில் வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.