தமிழக வெற்றிக் கழகம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் நோக்கத்துடன் புதிய டிஜிட்டல் முயற்சியை தொடங்கியுள்ளது. இதற்காக ‘My TVK’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர் விஜய், இந்த செயலியை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
இந்த செயலி ஒரு வினாடிக்கு 18,000 புதிய உறுப்பினர்களை பதிவு செய்யும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நவீன அம்சங்கள் வழியாக, விஜய் நேரடியாக மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை கண்காணிக்கவும் முடிகிறது. அதேசமயம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணையலாம் என அறிவிக்கப்பட்டது. இது தொடங்கி, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆவல் உருவானது.
விஜயின் அரசியல் பயணம் கேள்விக்குறியா?
இந்த செயலி வழியாக த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இதில் பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அதிகமாக உள்ளனர். கட்சி விருப்பப்படுவது போலவே, நேர்மையான முறையில் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.
ஆனால் இந்த செயலியின் மூலம் மிக விரைவில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கட்சியில் இணைய முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் வெறும் 0.1M உறுப்பினர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளனர் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
இதனால் விஜய் நடித்த பட டிரெய்லருக்கு மட்டும் 5 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்குகள் தர கூடிய ரசிகர்கள் ஏன் My TVK செயலியை இதுவரை வெறும் 0.1 மில்லியன் பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று எதிர்ப்பாளர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் சினிமாவும் அரசியலும் சமம் இல்லை. சினிமா வேறு அரசியல் வேறு என்றும் கூறி வருகிறார்கள். My TVK’ செயலி மூலம் நவீன அரசியல் இயக்கத்தை தொடங்கிய விஜய் மீது மக்கள் வைத்துள்ள செல்வாக்கையும் விஜய் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் நான் ஹீரோ தான் என்பதை நிரூபிப்பாரா? என்பதை நடக்கவிருக்கும் 2026 தேர்தல் முடிவுகளில் தான் இருக்கிறது.