Jason Sanjay: தாய் எட்டு அடி பாஞ்சா குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள். அப்படித்தான் தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவார் போல.
அப்பாவின் எந்த ஒரு தலையிடும் இல்லாமல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதில் ஜேசன் சஞ்சய் உறுதியாக இருப்பது அவருடைய நடவடிக்கைகளிலேயே தெரிகிறது. ஜேசன் சஞ்சய் தற்போது லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
அப்பா போல ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாத்தா போல இயக்குனர் அவதாரத்தை எடுத்து இருக்கிறார். ஜேசன் சஞ்சயின் முதல் படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள் என்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அடுத்த படத்தின் மாஸ் ஹீரோ
ஏ ஆர் ரகுமானின் மகனை கூட ஜேசன் சஞ்சய் தன்னுடைய படத்தில் பணியாற்ற வைக்கப் போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அவர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சந்திப்பை தன்னுடைய முதல் படத்தின் ஹீரோவாக கொண்டு வந்தார்.
தற்போது இந்த படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய இரண்டாவது படத்திற்காக நடிகர் சூர்யாவை அணுகி இருக்கிறார். சூர்யாவுக்காக இரண்டு கதைகளை தயார் செய்து இருக்கிறார்.
தன்னுடைய முதல் படத்தின் எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டு இதில் முழு கவனம் செலுத்தி பின்னர் சூர்யாவை சந்திக்க இருக்கிறார். விஜய் மற்றும் சூர்யா கல்லூரி காலத்தில் இருந்தே ஜிகிரி தோஸ்துகள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சூர்யா நடிப்பது எல்லாம் தமிழ் சினிமாவின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகள் அப்பா பெயரை வைத்து என்னென்னவோ செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் தன்னுடைய அப்பாவின் அடையாளம் கொஞ்சம் கூட இருக்கக் கூடாது என்று ஜேசன் சஞ்சய் உழைப்பது எல்லாம் வியப்பின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.