பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளுக்கும் வேலைக்கு செல்லக்கூடிய நபர்களுக்கும் மதிய உணவை செய்து கொடுக்க வேண்டும். அப்படி மதிய உணவை செய்து கொடுக்க வேண்டும் என்றால் அதற்காக காலையில் சீக்கிரம் எழுந்து சமைக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி இருப்போம். ஒரு வேளை என்றாவது நம்மை மறந்தே நாம் தூங்கி விட்டோம் என்றால் என்ன செய்வது என்று தெரியாமல் கடைகளில் இருந்து வாங்கி சாப்பிடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் அல்லது ஏதாவது ஒரு டிபனை செய்து சாப்பிடுவோம். இதற்கு மாற்றாக மிகவும் எளிதில் டக் என்று செய்யக்கூடிய ஒரு ஒன் பாட் தக்காளி சாதத்தை எப்படி செய்வது என்று தான் இந்து சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு – 2
பட்டை – 2 துண்டு
பிரியாணி இலை – ஒன்று
சோம்பு – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
புதினா மற்றும் கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி – 2 கப்
தண்ணீர் – 4 கப்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
– Advertisement –
செய்முறை
ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் எண்ணையை ஊற்ற வேண்டும். பிறகு அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை போன்றவற்றை சேர்க்க வேண்டும். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித்தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லியும் சேர்த்து, தயிரையும் சேர்த்து கைகளினாலேயே நன்றாக பிணைந்து விட வேண்டும். பிறகு இதில் ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு அந்த அரிசிக்கு தேவையான நான்கு கப் அளவு தண்ணீரையும் ஊற்றி ஒரு முறை கரண்டியை வைத்து கலந்து விடுங்கள். கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை போட்டு ஒரு முறை கலந்து குக்கர் மூடியை மூடி அடுப்பை பற்ற வைத்து அடுப்பில் வைத்து விட வேண்டும்.
– Advertisement –
மூன்று விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். விசில் முற்றிலும் நீங்கிய பிறகு குக்கரை திறந்தால் சுவையான தக்காளி சாதம் தயாராக இருக்கும். நேரத்தை மிச்சப்படுத்தவும் எரிவாயுவை மிச்சப்படுத்தவும் இந்த வகையில் நாம் தக்காளி சாதம் செய்யலாம். சுவைக்கு எந்தவித குறையும் இருக்காது.
இதையும் படிக்கலாமே:முருங்கைக் கீரை சட்னி செய்முறை
மிகவும் எளிமையான முறையில் சமைக்கவே தெரியாதவர்கள் கூட செய்யக்கூடிய ஒரு அற்புதமான தக்காளி சாதத்தை ஒரு முறை செய்து பாருங்கள். நேரமும் மிச்சமாகும் சுவையும் அருமையாக இருக்கும்.