Vijay : “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை விஜய் ஆரம்பித்ததிலுருந்தே அரசியல்வாதிகள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டார்கள். உள்ளே பயம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமலே சில கட்சிகள் இன்றுவரை இருந்து வருகின்றன.
என்ன நடந்தாலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருக்கும் விஜயை பார்த்துதான் இங்கு பல கட்சிகளுக்கு பயம் வருகிறது. கண்டிப்பாக ஓட்டுக்கள் உடைக்கப்படும் என்று நினைத்திருந்த வேளையில், தற்போது எங்கே மெஜாரிட்டி வந்து விடுமோ என்கிற அளவுக்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறது TVK.
அந்த பெரிய கட்சிக்கு எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ்..
பல கட்சிகள் விஜயுடன் கூட்டணி போட ரெடி. ஆனால், எதற்குமே வாய்திறக்கவில்லை விஜய். தற்போது மத்தியில் இருக்கும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைய போகிறது என தகவலைகள் கசிந்து வருகின்றன. ஆனால் இதெல்லாம் உண்மையாக நடக்க வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் பிரமுகர்கள் நேரிடையாகவே எச்சரித்துள்ளனர்.
திமுக அரசு எங்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே இந்த கூட்டணி நிலைக்கும், இல்லையென்றால் காங்கிரஸ் கிளி விஜய் கூட்டை நோக்கி பறந்து விடும் என உசிலம்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் நேரிடையாகவே கூறியுள்ளார் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்.
அதாவது எங்கு அடித்தால் எங்கு ஆட்டம் காணும் என நன்றாக தெரிந்து வைத்துள்ளார் விஜய். இதனால் தர்ம சங்கடத்தில் இருக்கின்றனர் திமுக. அரசியல் எப்போது, எப்படி மாறும் என யாருக்கும் தெரியாது. சூழ்நிலைகள் தான் முடிவு செய்யும்.
மதுரை மாநாட்டிற்கு பிறகு அநேகமாக காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைவதற்கு 99% வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறு அமைந்தால் விஜய் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என பெரிய கட்சிகள் பயத்தில் இருக்கிறார்களாம்.