வெற்றிமாறன், சிம்பு கூட்டணியில் உருவாக இருந்த படம் இப்பொழுது ட்ராப்பாகிவிட்டது. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு சிம்பு பிராஃபிட் ஷேர் கேட்டுள்ளார் ஆனால் இப்பொழுது திடீரென 45 கோடிகள் சம்பளம் கேட்டு அதிர வைத்துள்ளார். அதனால் தயாரிப்பாளர் கலைப்புலி S தானு பின்வாங்கி விட்டார்.
இதனால் தானுவால் தான் இந்த ப்ராஜெக்ட் நின்னு போனது என அப்செட்டில் இருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் ஏற்கனவே வாடிவாசல் படம் நிலுவையில் இருக்கிறது. அதனால் இந்த நல்லுறவை தானு காப்பாற்றியே ஆக வேண்டும்.
வாடிவாசல் படத்திற்கு சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவருக்கும் அட்வான்ஸ் ஆக ஒரு பெரும் தொகையை கொடுத்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார் தானு. அதனால் வாடிவாசல் ப்ராஜெக்டை கூடிய விரைவில் ஆரம்பிக்க ஏற்பாடு செய்து வருகிறார் தயாரிப்பாளர்.
இப்பொழுது சிம்பு படம் ட்ராப்பானதால் அப்செட்டில் இருந்த வெற்றிமாறன், எப்படியும் இந்த படத்திற்கு வேறு ஒரு தயாரிப்பாளர் கிடைத்து விடுவார் என இதை முதலில் ஆரம்பிக்கிறார். அதன் பின் வடசென்னை இரண்டாம் பாகம், இதுபோக எல்டர்க்குமார் கூட்டணியில் ஒரு படம்.
இப்படி வரிசையாக மூன்று படத்தை முடித்த பிறகு தான், ஒருவேளை வாடிவாசல் ஆரம்பிப்பதாக இருந்தால் வந்து முடித்துக் கொடுப்பார். இதனால் தயாரிப்பாளர் தானு இன்னும் ஒரு வருடம் வெயிட் பண்ண வேண்டும் என்பது மட்டும் இப்பொழுது உறுதியாகிவிட்டது.
எல்லாத்துக்கும் காரணம் சிம்புவிடம் ஒரு நிலையான பேச்சு இல்லை. இப்பொழுது அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் 45 கோடிகள் தான் பிரச்சனை. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் பட்ஜெட்டும் மிக மிக அதிகம்.