Cinema : ஒவ்வொரு ஆண்டும் 3 திரைப்படமாவது தமிழில் ஹிட் கொடுக்கிறது. அந்த ஹிட்டுக்கு முக்கிய காரணம் இயக்குனர்கள் தான். ஸ்கிரிப்ட் இருந்தால் மட்டும் போதாது அந்த திரைப்படத்தை ஹிட் கொடுக்கும் அளவுக்கு இயக்க வேண்டும்.
ஒரு சில இயக்குனர்கள் விரும்புவது பெரிய ஹீரோவை வைத்துதான் படம் எடுக்க வேண்டும். அதுவும் தொடர் திரைப்படங்களை அந்த ஹீரோக்களை வைத்துதான் எடுப்பார்கள். அந்த வகையில் ஒரே ஹீரோவுடன் கூட்டணி போட்ட இயக்குனர்கள்.
லோகேஷ் கனகராஜ்..
முதலில் 2021 ஆம் ஆண்டு விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். 135 கோடியில் விஜயை வைத்து இயக்கப்பட்ட திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடி வசூல் செய்தது.
அதன்பின் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கினார். அதுவும் பயங்கர ஹிட் கொடுத்தது. இன்றளவும் விஜய் அரசியலுக்கு போகாமல் சினிமாவில் இருந்திருந்தால் விஜயுடன் கூட்டணி போட்டே பல படங்களை இயக்கி இருப்பார்
ஆதிக் ரவிச்சந்திரன்..
விடாமுயற்சி திரைப்படத்தின் தோல்வியில் தத்தளித்துக் கொண்டிருந்த அஜித்தை குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு அணுகினார். திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இதன் பின் தற்போது அஜித்துடன் மீண்டும் கூட்டணி போட்டுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக AK 64 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
பண்டிராஜ்..
பாண்டியராஜ் கூட்டணியில் சூர்யா இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். ஒன்று 2015ல் பசங்க 2 திரைப்படம். இது பெரிதளவு மக்களை இம்ப்ரஸ் செய்யவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் வசூலில் 52 கோடியை எட்டியது.
இதே போல் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை மூன்று வருடம் கஷ்டப்பட்டு எடுத்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இயக்குனர். இந்த திரைப்படமும் நல்ல ஹிட்டை கொடுத்தது ஆனால் இயக்குனர் பாண்டிராஜ் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை.