Coolie : ரஜினிகாந்த் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி தற்போது வெளிவர காத்திருக்கும் படம்தான் கூலி. இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்து வருகின்றன.
ரஜினி படம் என்றாலே சிறு குழந்தைகள் முதல் அனைவர்க்கும் பிடிக்கும், அந்தவகையில் ஆர்வமாக இருந்த சிறு வயது பிள்ளைகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நிலையில் கூலி படத்திற்கு “A” சர்டிபிகேட் கொடுத்துள்ளார்களாம்.
காரணம் கேட்டு ஷாக் ஆன ரஜினி வெறியன்ஸ்..
இந்த “A” சர்டிபிகேட் கொடுத்ததற்கு காரணம் என்னன்னா படத்துல நீங்க நினைக்கிற மாதிரி கிளாமர் சீன்லாம் இல்லயாம். ஆனால் படத்துல ஒருசில சண்டை காட்சிகளை ரொம்ப கொடூரமா வைச்சுருக்காராம் லோகேஷ்.
படத்துல நாகர்ஜூனா வர காட்சிகள், அமீர்கான் வர சீன்லாம் ரொம்ப கொடூரமாக இருக்கறதா பேசிக்கிறாங்க. அதுமட்டுமல்ல படத்துல நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதால் “A” சர்டிபிகேட் கொடுத்துருக்காங்களாம்.
அதுவும் ரஜினி பட வரலாற்றிலையே இந்த படத்துக்குத்தான் “A” சர்டிபிகேட் கொடுத்திருக்கதா சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்களாம். படம் முழுக்க தக்காளி சட்னி ஊத்தி வைச்சு “A” சர்டிபிகேட் வாங்க வைச்சிடீங்களே லோகேஷ் என்று ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் கதறி வருகிறார்களாம்.