Rajini : பொதுவாக படத்தை எடுப்பதை விட மிகப்பெரிய காரியம், அதை ப்ரோமோஷன் செய்வது தான். சமீபகாலமாக தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை பிரமோஷன் செய்ய அதிகமாக செலவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி படம் வெளியாக இருக்கிறது.
இதற்காக பிரம்மாண்ட விழாவையும் சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த சூழலில் சமீபகாலமாக விஜய், அஜித் ரசிகர்கள் Fan Made போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவ்வாறு விஜய்யின் பீஸ்ட், கோட் அதேபோல் அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களிலும் போஸ்டர்கள் வெளியிட்டனர். இந்த போஸ்டர்களை வைத்து அதிகாரப்பூர்வ தளங்களிலும் ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள்.
ரசிகர்களால் உருவாக்கப்பட்ட கூலி போஸ்டர்

அதேபோல் தான் விஜய், அஜித் ரசிகர்கள் போல இப்போது ரஜினி ரசிகர்களும் கூலி படத்திற்கு போஸ்டர் டிசைன் செய்து இருக்கின்றனர். அதிகாரப்பூர்வ தளங்களிலும் இந்த போஸ்டரை பயன்படுத்தி வருகிறார்கள்.
முன்பெல்லாம் போஸ்டர என்று டிஜிட்டல் கிரியேட்டர்ஸ் வைத்து படங்களின் போஸ்டர்களை தயாரிப்பார்கள். இப்போது செலவை மிச்சம் செய்வதற்காக ரசிகர்கள் உருவாக்கும் போஸ்டரையே உபயோகப்படுத்துகின்றனர்.
மேலும் கூலி படத்தின் போஸ்டரும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஜெயிலர் பிறகு ரஜினி ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கின்றனர்.