பார்க்கிங், லப்பர் பந்து என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்தடுத்து இறங்கு முகமாகவே இருக்கிறது. லப்பர் பந்து படத்துக்குப் பின் வெகுவாக சம்பளத்தை உயர்த்திய அவருக்கு அடுத்தடுத்த படங்கள் வியாபாரமாகாமல் கிடப்பில் கிடக்கிறது.
சமீபத்தில் அவரின் மூன்று படங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இதில் ஒரு படத்திற்கு நல்ல வியாபார போட்டிகள் இருந்தும் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினையால் படம் ரிலீசாகாமல் நிலுவையில் இருக்கிறது. இதனால் அதிர்ஷ்டம் கைகூடியும் ஹரிஷ் கல்யாண் சிக்கலில் இருக்கிறார்.
100 கோடி வானவில்: டைரக்டர் சசி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இராணி நடித்துள்ளனர். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், சிம்பு நடித்த ஈஸ்வரன் போன்ற படங்களை தயாரித்தவர் பாலாஜி. ED ரெய்டில் மாட்டிக் கொண்ட இவர் வெளிநாட்டில் இருக்கிறார் அதனால் இந்த படம் நல்ல வியாபாரம் ஆகியும் கிடப்பில் கிடக்கிறது.
டீசல்: இந்த படம் முழுவதுமாக முடிந்து விட்டதாம். அக்டோபர் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாக இருந்தது. ஆனால் இன்னும் இது சாட்டிலைட் விற்காமல் ரிலீசாகவில்லை. ஏற்கனவே இந்த படத்தில் ஒரு பாடல் வைரல் ஆகியுள்ளது.
தாசமக்கான்: சென்னையில் உள்ள ஒரு ஏரியாவை தான் இந்த பெயர் சொல்லி அழைப்பார்கள். அந்த ஏரியாவில் நடக்கும் கதைகளை மையமாக வைத்து ஹரிஷ் கல்யாண் நடித்த படம். இந்த படத்திற்கு இன்னும் பத்து நாட்கள் சூட்டிங் மீதம் இருக்கிறது. ஒரு பாடல் காட்சி மட்டும் தான் எடுக்க வேண்டுமாம்.