Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பார்க்கவியை பார்த்து பேசி கூட்டிட்டு வந்து விடுகிறேன் என்று ஜனனி ஈஸ்வரிடம் சொல்லிவிட்டு கும்பகோணத்துக்கு போய் விடுகிறார். போனதும் ஜீவானந்தத்தையும் பார்கவிவையும் பார்த்து பேசுகிறார். ஆனால் பார்கவி உங்க பேச்சை கேட்டு என்னுடைய வாழ்க்கையை நான் வீணாக்க முடியாது.
ஈஸ்வரி அம்மா எனக்கு பாசம் காட்டும் ஒரு அம்மா தான் ஆனால் அதற்காக எல்லாத்தையும் என்னால் பண்ண முடியாது. எனக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும். அதற்கு உங்களை நான் யாரையும் சந்திக்காமல் எங்கேயாவது போனால் தான் நடக்கும். அதற்காகத்தான் நான் கனடாவிற்கு போகிறேன், தயவு செய்து உங்க குடும்பத்தை சரி செய்யும் விதமாக என்னை பலியாடா ஆகிவிடாதீர்கள் என்று தெளிவான முடிவை சொல்லி பார்கவி கனடா போவதற்கு தயாராகி விட்டார்.
இது எதுவும் தெரியாதா ஈஸ்வரி எப்படியும் பார்க்கவியிடம் பேசி ஜனனி கூட்டிட்டு வந்து விடுவார். அதன் பிறகு தர்ஷனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும், ஆனால் குணசேகரன் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக குணசேகரனை தனியாக கூப்பிட்டு பேசினார். ஆனால் சைக்கோ குணசேகரன் அதை புரிந்து கொள்ளாமல் ஈஸ்வரி மீது கடுப்பாகி கோபத்தை காட்டும் விதமாக கழுத்தை நெரித்து விடுகிறார்.
இதனால் மயக்கம் போட்டு கீழே விழுந்த ஈஸ்வரி மண்டையிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்து விட்டது. இரவு முழுவதும் ஈஸ்வரி உயிருக்கு போராடிய நிலையில் யாரும் பார்க்காமல் விட்டதால் நந்தினி எதேர்ச்சியாக ஈஸ்வரியை பார்க்க வருகிறார். அப்பொழுது ஈஸ்வரியின் நிலைமையை பார்த்து பரிதவித்துப் போன நந்தினி தர்ஷனை கூப்பிடுகிறார். தர்ஷன் தர்ஷினி வந்ததும் அம்மாவை எழுப்புகிறார்கள்.
அப்பொழுது உதவி பண்ணுவதற்கு யாரும் வராமல் எல்லோரும் வேடிக்கை பார்க்கும் விதமாக கரிகாலன் கதிர் அன்புக்கரசி அறிவுக்கரசி என அனைவரும் நிற்கிறார்கள். குணசேகரனும் யாரும் பக்கத்தில் கூட போகக்கூடாது என்று சொல்லிவிடுகிறார். இதனால் தர்ஷன் ஈஸ்வரியை காப்பாற்றும் விதமாக கூட்டிட்டு போகிறார். ஆனாலும் ஈஸ்வரி கதை முடிந்தது முடிந்தது தான்.
இதற்கு தண்டனை அனுபவிக்கும் விதமாக குணசேகரனுக்கு இந்த வன்மத்தின் மூலம் கொடுக்கப் போகும் தண்டனை மிகப்பெரியதாக இருக்கப்போகிறது. ஆனாலும் இனிமேல் இந்த நாடகத்தின் மீது இருந்த கொஞ்ச நெஞ்ச எதிர்பார்ப்பும் போய்விட்டது என்று சொல்வதற்கு ஏற்ப கதை மொத்தமாக சொதப்பிவிட்டது.