சித்திரம் பேசுதடி படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அன்றிலிருந்து இன்று வரை அவர் படங்கள் என்றால் ஒரு தனித்துவம் இருக்கும். கடைசியாக 2020 ஆம் ஆண்டு இவர் இயக்கிய சைக்கோ படம் வெளிவந்தது.
அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு என இவர் இயக்கிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இதில் விஷாலுக்காக துப்பறிவாளன் படத்தை இயக்கி, அவர் கேரியரில் ஒரு திருப்புமுனையை கொடுத்தார். கடந்த ஐந்து வருடங்களாக இவர் இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.
சமீபத்தில் இரண்டு படங்கள் இயக்கி முடித்துள்ளார் ஆனால் அந்த படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை . இவர் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் பிசாசு. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இப்பொழுது இயக்கியுள்ளார். இது கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது.
கடந்த இரண்டு முதல் மூன்று வருடங்களாக விஜய் சேதுபதியை வைத்து மிஸ்கின் இயக்கி வந்த படம் ட்ரெயின். சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படத்தை உருவாக்க நினைத்த அவர் தயாரிப்பாளர் எஸ் தானு விருப்பத்திற்கு ஏற்ப கமர்சியல் படமாக உருவாக்கி இருக்கிறார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் தலைவன் தலைவி. மகாராஜா படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு இந்த படம் சூப்பர் ஹிட் ஆக அமைந்துள்ளது, இதனால் விஜய் சேதுபதிக்கு நல்ல மார்க்கெட் கிடைத்து அவர் படங்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வெற்றிமாறனின் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி பிசியாக இருந்ததால், ட்ரெயின் படத்தை மிஷ்கின் முடிப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொண்டார் . ஆனால் அந்த படம் இப்பொழுது நிறைவு பெற்றதை அடுத்து ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார். தலைவன் தலைவி நல்ல விமர்சனம் பெற்றதால் விஜய் சேதுபதி படத்திற்கு நல்ல வியாபாரம் இருக்கிறது.