Ethir Neechal : சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல் 2. இந்த தொடரின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறார்கள்.
குறிப்பாக சன் டிவி டிஆர்பியில் முக்கிய பங்கு வகிக்கிறது எதிர்நீச்சல் தொடர். இந்த சூழலில் இத்தொடரில் இருந்து முக்கியமான கதாபாத்திரமான ஈஸ்வரி கேரக்டரில் நடித்த நடிகை கனிகா வெளியேறுகிறார். வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான நடிகை தான் கனிகா.
இவர் முதல் சீசனில் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்தார். எதிர்பாராத விதமாக மாரடைப்பு காரணமாக மாரிமுத்து இறந்து விட்டார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகிய கனிகா
இப்போது எதிர்நீச்சல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கீழே தள்ளி விடுகிறார் குணசேகரன். இதனால் பலத்த காயம் உடன் ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு சுய நினைவு இல்லாததால் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இப்படி இருக்கையில் இப்போது இந்த தொடரில் இருந்து கனிகா விலகி விட்டாராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆகையால் கோமா ஸ்டேஜிலேயே வைத்து அவரை காண்பிக்காமல் இயக்குனர் தொடரை தொடர உள்ளாரா என்பது தெரியவில்லை.
இல்லை அவர் இறந்து விட்டதாக கூறி ஈஸ்வரியின் கேரக்டரை முடிவுக்கு கொண்டு வரவும் வாய்ப்பு இருக்கிறது. இத்தனை வருடங்களாக பயணித்த கனிகா இந்த தொடரை விட்டு வெளியேறி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.