தமிழ் சினிமா உலகில் ஒரு ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதைகள் பல முறை கடைசி நேரத்தில் நடிகர் மாற்றம் காரணமாக வேறு ஒருவரிடம் சென்று விடுகின்றன. இந்த மாற்றங்கள் சில சமயம் படத்தின் விதியையே மாற்றி விடுகின்றன. அப்படிப்பட்ட படங்களை இங்கு பார்க்கலாம்.
தூள் 2003 ஆம் ஆண்டு வெளியான படத்தின் கதை இயக்குனர் தரணி முதலில் விஜய்க்காக எழுதினர். ஆனால் விஜயின் கால்ஷீட் மற்றும் பிஸி ஷேடுல் காரணங்களால் அந்த வாய்ப்பு விக்ரமிடம் சென்றது. விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் பெரிய ஹிட்டாகி விக்ரமின் கேரியரில் ஒரு
முக்கிய மைல் கல்லாக அமைந்தது.
கைதி 2019 ஆம் ஆண்டு வெளியான படத்தின் இந்த கதையை முதலில் லோகேஷ் கனகராஜ் தில்லி கதாபாத்திரத்தை மன்சூர் அலிகான் ஐ மனதில் வைத்து எழுதியதாகவும் அவரால் நடிக்க முடியாத காரணத்தால் கதையில் சில மாற்றங்களை செய்து அந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்தார். முடிவில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.
டான் 2022 இல் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த படம். இந்த படம் முதலில் உதயநிதிக்கு சொல்லபட்டது. ஆனால் உதயநிதிக்கு இந்த ஸ்கிரிப்ட்டில் நடிக்க தயக்கமாக இருந்ததால் அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடித்தார். இந்த படத்தின் காமெடி காட்சியும் கிளைமாக்ஸூம் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறலாம்.
2022 ல் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் முதலில் வில்லன் கேரக்டர் லாரன்ஸ்க்கு திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் விஜய் சேதுபதி சந்தானம் கேரக்டரில் நடித்து தன்னுடைய மாஸை வெளிப்படுத்தினர். அவரது நடிப்பு கேரக்டரின் ஆழத்தை இரட்டிப்பு செய்து ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது.
விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ரோலக்ஸ் கேரக்டரில் முதலில் பிரித்விராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா நடித்து ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் இழுத்துள்ளார் என்றே கூறலாம்.