தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் இரு நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். 1970களில், இருவரும் ஹீரோவாக நிலை பெறுவதற்கு முன்பு பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்தக் காலத்தின் சில முக்கியமான படங்கள் இன்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன.
மூன்று முடிச்சு 1976-இல் வெளிவந்த இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கி, தயாரித்தார். இது தெலுங்கு படமான ஓ சீதா கதா வின் ரீமேக் ஆகும். ரஜினி வில்லன் கதாபாத்திரத்தில், கமல் கதாநாயகனாக நடித்த இந்த படம், காதல் திரில்லர் திரைப்படமாகும். இந்த படத்தின் வெற்றி இருவரின் நடிப்பிற்கும் பெரிய பாராட்டுகளைப் பெற்றது.
அதே ஆண்டில் வெளிவந்த 16 வயதினிலே படத்தை பாரதிராஜா இயக்கி, எஸ்.ஏ. ராஜ்கண்ணு தயாரிப்பில் பாரதிராஜா இயக்கினார்.இந்த படத்தில் கமல் சப்பாணி என்ற கதாபாத்திரத்தில், ரஜினி பரட்டையாகவும் நடித்து இன்னும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறார்கள். இது 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
அவள் அப்படித்தான் 1978-இல் வெளியான படம் தமிழில் வெளிவந்த கடைசி Black & White திரைப்படமாக வரலாறு பெற்றது. சி. ருத்ரய்யா இயக்கத்தில் வெளிவந்த படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சமூக உண்மை மற்றும் பெண்ணிய கருத்துகளை முன்வைத்த இந்த படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. தமிழக அரசு திரைப்பட விருதுகள் 1978 ஆண்டின் சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசு பெற்றது.
அல்லாவுதீனும் அற்புத விளக்கும் 1979-இல் ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்தது. ஆயிரத்தொரு இரவுகள் என்ற புதினத்திலிருந்து அலாவுதீன் கதை எடுக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட செட் வண்ணத்திரை மாயாஜாலத்துடன், இருவரும் கற்பனை உலக கதாபாத்திரங்களில் நடித்தனர்.
நினைத்தாலே இனிக்கும் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். கமல் சந்துரு கதாபாத்திரத்திலும், ரஜினி தீபக் கதாபாத்திரத்திலும் தங்களது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தனர்.
இப்படங்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணை நடிப்பின் பொற்காலத்தை சித்தரிக்கின்றன. தங்களின் தனித்துவமான நடிப்பால், இவை தமிழ் திரை வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.