Coolie Review: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கூலி வரும் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த ட்ரெய்லர் கதையை யூகிக்க முடியாதபடி இருந்தது பெரும் பிளஸ் ஆக இருக்கிறது.

தற்போது படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் தங்களுடைய விமர்சனத்தை கொடுத்துள்ளனர். அதில் படம் பவர்ஃபுல்லாக இருப்பதாகவும் ரஜினிக்கு மிகப்பெரும் ஹிட் உறுதி என்றும் தெரிவித்துள்ளனர்.
முதல் விமர்சனம்
அதேபோல் ஸ்பெஷல் காட்சியை பார்த்த பத்திரிக்கையாளர்களும் தங்கள் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதில் சூப்பர் ஸ்டார் தனி ஒரு ஆளாக படத்தை தாங்கி பிடித்துள்ளார்.

அருமையான கதை, விறுவிறுப்பு என எல்லாமே வேற லெவலில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர். மேலும் கிளைமேக்ஸ் மற்றும் பின்னணி இசை எல்லாமே பட்டையை கிளப்பி விட்டது.
சாதாரண கதையை கூட விஷூவலாக பார்க்கும் போது கொண்டாடும் வகையில் லோகேஷ் கொடுத்திருக்கிறார் என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இப்படியே ரிலீசுக்கு முன்பு வரும் விமர்சனங்கள் கூலிக்கு நல்ல பிரமோஷன் ஆக உள்ளது.
ஆக மொத்தம் தமிழ் சினிமாவின் ஆயிரம் கோடி கனவு கூலி படத்தால் நனவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.