Adhik Ravichandran : மார்க் ஆண்டனி படத்தின் மூலம் கவனம் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கி இருந்தார். அஜித்தின் ஃபேன் பாயாக இந்த படத்தில் சம்பவம் செய்திருந்தால். இது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டிருந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணைந்துள்ளது. ஏகே 64 படத்தை ராகுல் தயாரிக்க இருக்கிறார். இதில் என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் என்றால் ஏகே 64 படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
பொதுவாக ஆதிக் படங்கள் என்றாலே ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பார். குட் பேட் அட்லி படத்தில் கூட ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இளையராஜா இந்த படத்தில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதாக நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்திருந்தார்.
ஏகே 64 படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரனின் கூட்டணி
இந்த சூழலில் தற்போது அனிருத்தை ஆதிக் கமிட் செய்ய காரணம் இருக்கிறது. பொதுவாகவே ரஜினியின் படங்களில் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். குறிப்பாக அனிருத் ரஜினியிடம் சொல்லி தான் லோகேஷுக்கு கூலி படத்தின் வாய்ப்பு கிடைத்ததாம்.
இதை லோகேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதேபோல் தான் அனிருத்தை தனது படத்தில் புக் செய்தால் அடுத்ததாக ரஜினி படத்தின் வாய்ப்பு கன்ஃபார்ம் என்று ஆதிக் பிளான் செய்துள்ளார். கண்டிப்பாக அதிக்கை அனிருத் ரஜினியிடம் சிபாரிசு செய்வார்.
இதனால் ஏகே 64 படத்திற்கு பிறகு ஆதித் ரஜினியுடன் கூட்டணி போட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் அனிருத் என்ற சின்ன மீனை போட்டு ரஜினி என்ற பெரிய திமிங்கிலத்தை வலையில் சிக்க வைக்க இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.