சிவகார்த்திகேயன் மதராசி படத்தை முடித்த பிறகு வெங்கட் பிரபுவுடன் ஒரு படமும், சிபி சக்கரவர்த்தியுடன் மற்றொரு படமும் நடிக்க உள்ளார். இதில் சிபி படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கரை கமிட் செய்துள்ளனர். முதன் முதலாக சிவா படத்திற்கு இவர் மியூசிக் போட உள்ளார்.
பெரும்பாலும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பார். ஆனால் இப்பொழுது இவர் நடிக்கும் அடுத்த படத்திற்கு சாய் அபயங்கருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். ஏன் இந்த புது முயற்சி என்பதற்கு இப்பொழுது விடை கிடைத்துள்ளது.
அனிருத்தம், சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள். அனிருத் இசை அமைக்கும் பொழுது இருவரை மட்டுமே தன் ஸ்டுடியோக்குள் அனுமதிப்பார். தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் தான் முழு உரிமை உண்டு. அப்பேர்பட்ட நண்பரை இப்பொழுது சிவகார்த்திகேயன் விட்டுக் கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயனை இயக்கும் சிபி சக்கரவர்த்தி அட்லீிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி வந்தவர். அவரை இந்த படத்திற்கு சிபாரிசு செய்தது அட்லி தானாம். அதை போல் சாய் அபயங்கரையும் அவர்தான் சிபாரிசு செய்துள்ளாராம் . இதனால் சிவகார்த்திகேயனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
தற்சமயம் பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வருகிறார் அட்லி. அவர் கரிசனம் இருந்தால் நாம் எளிதில் பாலிவுட்டுக்கு போகலாம். அதனால் இப்பொழுது நடிகர்கள் எல்லோரும் அட்லி சொன்னால் ஒரு அடி பின் வாங்குகிறார்கள். தேவையில்லாமல் அட்லியிடம் மனக்கசப்பு வேண்டாம் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என யோசித்து காய் நகர்த்தி வருகிறார்கள்.