Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், கிரிஷ் ஆசைப்பட்ட மாதிரி முத்து மீனா கூட அதே வீட்டில் இருந்தால்தான் அம்மாவின் பாசமும் சொந்தக்காரர்களின் அரவணைப்பும் கிடைக்கும் என்று முடிவு பண்ணிய ரோகினி அம்மா ஹாஸ்பிடலில் இருந்து சொல்லாமல் எங்கேயோ காணாமல் போய்விடுகிறார்.
இது தெரியாத முத்து எப்படியாவது கிரிஷ் பாட்டியை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஹாஸ்பிடல் சென்று சிசிடிவி கேமரா மூலம் எங்கே போனார் என்பதை தெரிந்து கொள்ள போகிறார். அந்த வகையில் அங்கே இருக்கும் ஒரு வார்டு பாய் மூலம் சிசிடிவி கேமராவை பார்க்க சொல்கிறார்.
ஒருவேளை முத்து அந்த சிசிடிவி கேமராவை பார்த்து இருந்தால் அடிக்கடி ரோகிணி வந்து பார்த்துட்டு போய் பணம் கொடுத்த விஷயம் தெரிய வந்திருக்கும். ஆனால் அந்த வார்டு பாய் வெளி ஆளுக்கு சிசிடிவி ரூமில் அனுமதி கிடையாது என்று சொல்லி அவர் பாத்துட்டு வந்து முத்துவிடம் சொல்கிறார்.
அதாவது கிரீஸ் பாட்டி இரவு ஆஸ்பிட்டலில் பணத்தை கட்டி விட்டு யாரிடமும் சொல்லாமல் ஆட்டோவில் போனதை வார்டு பாய் மூலம் முத்து தெரிந்து கொண்டார். அந்த வகையில் முத்து பக்கத்தில் இருக்கும் ஆட்டோக்காரர்களிடம் விசாரிக்கிறார்.
அதற்கு அந்த ஆட்டோக்காரர் அவர்கள் போட்டோ ஏதாவது இருந்தால் கொடுங்கள் நாங்கள் பார்க்கிறோம் என சொல்கிறார். உடனே வீட்டுக்கு வந்த முத்து, கிரிஷ்விடம் உங்க பாட்டி போட்டோ ஏதாவது இருக்குமா என்று கேட்கிறார். அதற்கு கிரிஷ் இல்லை என்று சொல்லிய நிலையில் அப்படி என்றால் உங்க அம்மா போன் நம்பர் தெரியுமா என்று கேட்கிறார்.
அதற்கு கிரிஷ் தெரியாது என்று சொல்லிய நிலையில் ஸ்கூலில் போய் விசாரித்தால் ஏதாவது கிடைக்கும் என்று மீனா, முத்துவிடம் சொல்கிறார். ஆனால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ரோகிணியை கிரிஷ் பாட்டி தவிக்க விட்டு போய்விட்டார்.
க்ரிஷ் ஒவ்வொரு விஷயத்துக்கும் ரோகிணியை தான் பார்க்கிறார். க்ரிஷ் மூலமா ரோகினி மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இல்லை என்றால் கிரிஷ் பற்றிய விஷயங்களை தற்போது கண்டுபிடிக்கும் விதமாக முத்து மும்மரமாக இருப்பதால் இந்த முறை ரோகிணி தப்பிக்க வாய்ப்பே இல்லை.
கையும் களவுமாக குடும்பத்திடம் மாட்டிக் கொள்ளப் போகிறார். அப்பொழுதுதான் இது ரோகிணி இல்லை கல்யாணி, ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது என்ற எல்லா விஷயமும் வெளிவர போகிறது.