Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், பல்லவனுக்கு காய்ச்சல் வந்ததும் நிலா பக்கத்திலிருந்து பார்த்து பொறுப்பாக நடந்து கொண்டார். அப்பொழுது வானதி வீட்டுக்கு வந்து பாண்டியன் பேசியதையும் திட்டியதையும் சொல்லி ரொம்பவே ஃபீல் பண்ணினார். உடனே நிலா நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி பாண்டியன் என்ன நிலைமையில் இருந்தார் என்பதையும் புரிய வைத்து விட்டார்.
அடுத்து வீட்டுக்கு வந்த பாண்டியனிடமும் வானதிக்கு இங்கே என்ன நடந்தது என்று தெரியாது. நீங்களும் பொறுமையாக சொல்லவில்லை, இரண்டு நாள் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தால் இப்படி தான் கோபம் வரும். வானதி இடத்தில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பேன், அதனால் வானதி வந்தால் சகஜமாக பேசி பழகுங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறார்.
அடுத்து நேரம் ஆகியும் இன்னும் சோழன் வரவில்லை என்று நிலா பதட்டம் அடைகிறார். நிலாவின் பதட்டமான அக்கறையை பார்த்த சேரன் பாண்டியன் பல்லவன் கொஞ்சம் கொஞ்சமாக நிலா மனசு மாறுகிறது என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். அப்பொழுது சோழனுக்கு நிலா போன் பண்ணி எப்பொழுது வருவீங்க என்று கேட்கிறார்.
சோழன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது வர நேராகும் என்று சொல்லுகிறார். ஆனாலும் நிலா தூங்காமல் சோழனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு சோழன் வந்ததும் பேசிய பிறகுதான் நிலா தூங்கப்போகிறார். அடுத்ததாக சோழனுக்கு சாப்பாடு வைத்துக் கொண்டிருக்கும் பாண்டியன், நிலாவின் அக்கறை கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது என்று சோழனிடம் சொல்கிறார்.
அப்பொழுது வானதி, பாண்டியனுக்கு போன் பண்ணிய பொழுது சோழன் எடுத்துப் பேசு மன்னிப்பு கேட்க தான் கால் பண்ணி இருப்பாள் என்று சொல்கிறார். உடனே பாண்டியன் போனை எடுத்துப் பேசும் பொழுது வானதி மன்னிப்பு கேட்காமல் வழக்கம்போல் திட்டி கோபத்தை காட்டுகிறார். இதனால் பேச முடியாமல் பாண்டியன் போனை கட் பண்ணி விட்டு தூங்க போய் விடுகிறார்.
அடுத்ததாக சோழன், நிலவின் காதலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவதற்கு பதிலாக என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சொதப்புகிறார். அந்த வகையில் நிலாவிடம் சோழன் எனக்காக நேற்று ரொம்ப தவித்து காத்துக் கொண்டிருந்தீர்கள். நான் வரும்வரை தூங்காமல் இருந்தீங்க, எனக்கு போன் பண்ணி எப்ப வருவீங்க என்று கேட்டீர்கள். இதெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்று சொல்கிறார்.
ஆனால் இப்படி சோழன் பேசியதால் நிலா, இதை மாற்றும் விதமாக அப்பாவால் உங்களுக்கு எந்தவித பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் பயந்தேன். மற்றபடி ஒன்னும் இல்லை என்று சொல்லி சோழனுக்கு பல்ப் கொடுக்கப் போகிறார்.