Memes: ரஜினியின் கூலி வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இதற்காகவே காத்திருக்கும் தலைவரின் ரசிகர்கள் இப்போது டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் புக் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஃப்ரீ பிசினஸ் 500 கோடியை தாண்டி வியாபாரம் ஆகி இருக்கிறது. அதேபோல் இப்போது டிக்கெட் புக்கிங் சாதனை படைத்து வருகிறது. அது மட்டும் இன்றி பிளாக்கில் டிக்கெட் 2000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

எப்படியாவது ஆயிரம் கோடியை அடிக்க வேண்டும் என பிளான் போட்டு இவ்வளவு விலைக்கு டிக்கெட் விக்கிறாங்க என பேச்சு எழுந்துள்ளது. ஆனாலும் தலைவர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என ரசிகர்கள் எவ்வளவு விலை ஆனாலும் பரவாயில்லை என டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.

அதேபோல் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்சார் அதிகாரிகளின் விமர்சனமும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க இணையவாசிகள் வழக்கம்போல் இதை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். கூலி படத்துக்கு டிக்கெட் போட்டாச்சா, நான் இன்னும் வேட்டையன் படமே பார்க்கல.

ஆகஸ்ட் 14 தியேட்டருக்கு வருவோம் படம் நல்லா இருக்கணும். அதை விட்டுட்டு அடுத்த மாசம் இன்டர்வியூல டைம் பத்தல, பூஜா டான்ஸ் வச்சே ஆகணும்னு சன் பிக்சர்ஸ் சொன்னாங்க இப்படி ஏதாவது கதை விட்ட அவ்வளவுதான் என லோகேஷை கலாய்க்கும் மீம்ஸ் பரவி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.
